Subscribe: RSS Twitter

எம்மைப்பற்றி

தினச்செய்தி கடந்த டிசெம்பர் மாதம் 1ம் திகதி 2014 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செய்திக்கான இணையத்தளம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகிறது.

அநேகமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினசரிகளும், இணையதளங்களும் தமிழ் தேசியம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து இயங்கிக் கொண்டு வருகிறன.

அந்த வட்டத்திலிருந்து சற்று வெளிவந்து தேசியம் மற்றும் சர்வதேசியம் என்ற பரந்த எல்லைக்குள் புகுந்து செய்திகளையும், ஆக்கங்களையும் வெளியிடும் எண்ணத்துடன் தான் நாம் தினச்செய்தியை ஆரம்பித்துள்ளோம்.

தமிழில் இது ஒரு மாறுபட்ட களம். மற்றைய இணையதளங்களிலும் பார்க்க இது வேறுபட்ட முயற்சியாகும்.

“என்றென்றும் உங்களுடன் இருப்பேம்,” என்ற இலட்சியத்துடன் தினச்செய்தி ஆரம்பித்து வெளிவருகிறது.

செய்திகளை திரிக்காமல் இருட்டடிப்பு செய்யாமல் வெளியிடுவதே எமது நோக்கமாகும்.

என்றும் உங்களுடன் இணைந்திருப்போம்…

முக்கிய நோக்கம்

பொதுமக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கல்.

மக்களின் நோக்கங்களில் மாற்றங்களை உருவாக்கல்.

இனங்களுக்கிடையே ஒற்றுமை இணக்கப்பாட்டை உருவாக்கல் மக்கள் மத்தியில் ஒருமித்த இணக்கப்பாட்டை ஏற்படுத்தல்.

நாட்டு மக்களிடையே தேசிய ஒருமைப்பாட்டையும், அபிவிருத்தி, சுகவாழ்வு ஆகியனவற்றை மேம்படுத்துவதே தினச்செய்தியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

தினச்செய்தி இணையதளத்தில் முக்கியமான நிகழ்வு உருவாகும் போது அத்தகவல்களை விசேடமாக உடன் வழங்குவதும், விளையாட்டு, தமிழ், கலாச்சாரம், சமயம், சினிமா ஆகியன பற்றியும் செய்திகள் வெளியிடப்படும்.

காலப்போக்கில் 24 மணிநேர சேவை இணையத்தள வானொலி அறிமுகப்படுத்தப்படும்.

ஆசிாியா்

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net