Subscribe: RSS Twitter
:
தமிழ் பெரியார் வரிசையில் வைத்து போற்றி பாராட்டப்பட வேண்டிய பல பெரியார்கள் இலங்கை நாட்டில் வாழ்ந்துள்ளனர். அந்த வரிசையில் எமது பாராட்டுகளுக்கும் போற்றுதலுக்கும் உரியவர் கல்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட முதலி யார் சைமன் காசிச்செட்டி என்ற தமிழ் மூதறிஞர்.
அவரின் புகழ்பூத்த வாழ்க்கை வரலாற்று நுழைவாயிலுக்குள் அழைத்துச் செல்வதற்கு முன் னர், தோரணவாயிலில் வைத்து வேறு பல தகவல்களைத் தர வேண்டி இருக்கின்றது.
தமிழர்கள் தமது மொழியின் பெருமை பற்றிக் குறிப்பிடும் போது ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன் தோன்றி மூத்த தமிழ்’ என்பர். அதேநேரம் தமிழர் தமது மாட்சி பற்றி குறிப்பிடும் போது ‘ஆண்ட இனம் மீண்டும் ஒரு முறை ஆளநினைப்பதில் தவறு என்ன?’ என்று கேட்பர்.
தமிழன் ஆண்ட இனம் என்பதில் சிறுதளவும் சந்தேகம் இல்லை. ஆனால் ஆண்ட இனம் என்று எம்மை எப்படிக் குறிப் பிட்டுக் கொள்கின்றோம் என்பது பற்றி யாருமே ஆராய முன்வரு வதில்லை. எம்மை யார் என்று தெரியாமல் உணராமல், நாம் எம்மைப்பற்றி, ஆனால் ‘ஆண்ட இனம்’ என்று எம்மை எப்படிக் குறிப்பிட்டுக் கொள்கின்றோம் என்பது பற்றி யாருமே ஆராய முன்வருவதில்லை. எம்மை யார், என்று தெரியாமல், உணராமல், நாம் எம்மைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்கின்றோம்.
இது இன்றைய தலைமுறையின் தவறு அல்ல. எமது முன் னைய தலைமுறையினரின் தவறு என்றே துணிந்து கூறலாம்.எமது மூதாதையர்கள் ஈழ வள நாட்டில் வாழ்ந்த தமிழர் களின் மொழியின், மதத்தின் வரலாற்றை எழுதி வைக்கத் தவறிவிட்டார்கள். அந்தத் தவறி னால் எம்மை நாம் சீராக வர லாற்று ரீதியாக அறிந்து கொள்ள முடியவில்லை.
பரந்துபட்ட சீன தேசத்தில், அந்த நாட்டில் வாழ்ந்த அறிஞர்கள், அந்த நாட்டின் வரலாற்றை அன்றுதொட்டு மிகவும் கிரமமாக எழுதி வந்துள்ளார்கள். ஏன் வெகுதூரம் சீனாவுக்கு போக வேண்டும்.? இலங்கையில் வாழ்ந்த சிங்கள பௌத்த மதத் துறவிகள், இந்த நாட்டின் சிங்கள மன்னர்களின் ஆட்சி, பௌத்த மதத்தின் மாட்சி, ஆகியவற்றை வரலாறாக எழுதியுள்ளார்கள். தீபவம்சம், மகாவம்சம், சூள வம்சம்,  இரஜவாளியா என்ற நூல்களில் வரலாற்றிலும் பார்க்க கற்பனையே விஞ்சி நிற்கின்றது.
பொய், புனைசுருட்டுக்கள் அடங்கிய இந்த வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொண்டே, சிங்களவர் எமது மண்ணுக்கான தமது உரிமையை நிலைநாட்டுகின்றனர்.அதுமாத்திரமன்றி, 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் தமிழர்களுக்கு என்று தனி யான இரசதானி யாழ்ப்பாணத் தில் அமைந்தது என்று இந்த சிங்கள வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டே சமகாலத்தில் வாழ்ந்த, வாழும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தை துணிந்து எழுதி வருகின்றனர்.
இவ்வாறு வரலாறு எழுதும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் கொண்டே சமகாலத்தில் வாழ்ந்த வாழும் தமிழ் ஆராய்ச்சியாளர் கள் யாழ்ப்பாணச் சரித்திரத்தை துணிந்து எழுதி வருகின்றனர். இவ்வாறு வரலாறு எழுதும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கும், தமிழருக்கும், இந்து மதத்துக்கும் பெரிய அபச் சேவை செய்து வருகின்றார்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் வரலாறுகள் அங் கொன்றும், இங்கொன்றுமாக பல நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் குறிப்புக்களை வைத்தே நாம் இன்று எமது உண்மையான வரலாற்றை திரட்ட வேண்டியவர்களாக உள்ளோம்.
பண்டைய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம், விஷணுபுராணம் ஆகியவற்றிலிருந்தே நாம் எமது வரலாற்று நிகழ்வுகளைப் பெறவேண்டியவர்களாக உள் ளோம்.
சிங்கள வரலாற்று நூல்களில் இலங்கை வரலாற்று பற்றி குறிப்பிடும் பொழுது, விஜயனும் (பொதுஆண்டு 483 – 445) அவனது தோழர்கள் 700 பேர்களும் இலங்கை வந்தடைந்த காலத்துடன் ஆரம்பிக்கின்றார்கள். அதாவது, பொது ஆண்டு (கிறிஸ்துவுக்கு முன்னர் சுமார் ஐநூறு ஆண்டுகள் அளவில் இருந்தே தமது வரலாற்றை ஆரம்பிக்கின்றனர்.
ஆனால், விஜயன் வருகைக்கு இராண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே, இலங்கைத் தீவில் தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாக இராம – இராவண கதை மூலம் அறியக்கூடிய தாக உள்ளது.
இலங்கை மன்னன் அசுரன் அல்ல. அசுரர் என்றால் என்ன விளக்கம்? சுரர் என்றால் மதுபானம் அருந்துவபர்கள் மாமிசம்  உண்பவர்கள் அசுரர் என்றால் மாமிசம் உண்ணாதவர்கள். மது அருந்தாதவர்கள். அசுரர் குலத்தவன். அசுரன் அல்ல. அவனது குலம் தான் அசுரகுலம். அசுரர்களை தாசர்கள் என்றும் அழைப்பர். அவ்வாறே விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமர் சூரியகுலத்தவர். அசுரர்குலத் தலைவனாக இராவணன் இலங்கையை ஆண்டு வந்தான்.இராம – இராவண யுத்தத்திற்கு பின்னர், இலங்கையின் அரசனாக விபீஷணன் இராமனால் முடிசூட்டப்பட்டான்.
அசுர குலத்து அரசர்கள் கல்யானி என்ற நகரையே தமது தலை நகராக கொண்டிருந்தனர். இந்த கல்யானி என்ற நகரமே கால கெதியில் சிங்கள வர்களால் களனியா என்று அழைக்கப்பட்டு வருகின்றது. இன்றும் கூட களனியாவில் வாழும் மக்கள் விபீஷணனைக் கடவுளாக மதித்து விஹாரைகளில் விபீஷணனனின் திருவுருவச் சிலையை வைத்து ‘விபீஷண தெய்யோ’ என்று அழைத்து வணங்கி வருகின்றார்கள்.
அதை அடுத்து, தீபவம்சம், மகாவம்சம் சூலவம்சம் ஆகிய சிங்களவர்களின் பாளி மொழி வரலாற்று நூல்கள் மூலம் களனியாவிலும் நாகதீபத்திலும் நாகர் குலத்தவர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சீத்தலைச்சாத்தனரால் எழுதப்பட்ட மணிமேகலை என்ற தமிழ்க் காப்பியம் தேரவாத பௌத்தமதத்தைச் சார்ந்த நூலாகும். அந்த காப்பியத் தலைவியான மணிமேகலை தெய்வம், நாகதீபத்துக்கு வந்தபோது நாகர்குல மன்னர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றது என்றும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். விஜயன் இலங்கை வருவதற்கு முன்னரே, நாகதீபம் வட இலங்கையில் சிறந்த செழிப்புமிக்க வணிகத்தலமாக விளங்கிற்று.
நாகதீபம் எங்கே இருந்தது என்று ஆராய்ச்சியாளர் குழம்பிக் கொண்டேயிருந்தனர். அப் பொழுது வல்லிபுரக் கோயிலில் கிடைத்த தங்கச்செப்பேட்டு சாசனம் மூலம் விடை கிடைத்தது. இந்த செப்பேட்டுச் சாசனம் இரண்டாவது நூற்றாண்டுக்கு முந்தியது. அதில் ‘படகரா’ என்று காணும் குறிப்பின் பிரகாரம் இலங்கையின் வடபகுதியே அன்றைய காலத்தில் ஷநாகதீபம் என்று வர்ணிக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
இந்த நாகதீபத்தின் தலைநகராக அன்று கந்தரோடை விளங் கிற்று என்றும், நாகதீபத்தை ஆண்டுவந்த நாகல் குல அரச குடும்பத்திற்கும் கல்யாணியில்  இருந்து ஆட்சி புரிந்த நாகர் குல மன்னர்களுக்குமிடையில் உறவும், தொடர்பும் இருந்தது என்றும் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
களனியா மேல் மாகாணத் தில் உள்ள நகரம். அதுவே நாகர் குல மன்னர்களின் தலை நகரம் என்பது தீபவம்சம், மகா வம்சம் மூலம் உறுதியாகின்றது. வடமேல் மாகாணத்தில் உள்ள நீர்கொழும்பு என்ற பிரதேசத்தை, சிங்களவர்கள் ‘நிகம் புவா’ என்று அழைப்பர். ஏன் அப்படி அழைக்கின்றனர்? இராவணனுக்கு செஞ்சோற்றுக்கடன் தீர்த்தமற்ற ஒரு தம்பி, கும்பகர்ணன். இந்த கும்பகர்ணனுக்கு நுகம்பன் என்ற பெயர் கொண்ட சிறந்த, எல்லோராலும் பாராட்டப்பட்ட மகன் ஒருவன் இருந் தான். இந்த நுகம்பன் பெயரே திரிந்து நிகம்பு என்ற காரண இடுகுறி பெயராக மாறி சிங்களவர்களால் அவ்வாறு அழைக்கப்படத் தொடங்கிற்று.
ஏனைய ஈழத்தமிழர்களின் ஆரம்ப இடைப்பட்ட கால வரலாறு ஆராயப்பட வேண்டும். இருந்தபோதிலும் கிடைக்கப் பெற்ற ஆராய்ச்சிகளை வைத்தும், சிங்கள வரலாற்று நூல் களை வைத்தும் ஆராயும்போது, விஜயன் தொடக்கம் தேவநம்பி யதீசன் (பொது ஆண்டு 250 – 210) வரையில் இலங்கையை ஆண்ட அரசர்கள், இந்து மதத்தினர் என்பதை அறுதியிட்டுக் கூறமுடியும்.(Sir Charlles Marshal)மற்றும் பிரிட்டிஷ் படைகளின் தளபதி சேர்ஜோன் வில்சன்ஆ கியோர் முன்னுரை எழுதி சிறப்பித்தனர். இந்த நூலை வெளியிட அன்றைய இலங்கைத் தேசாதிபதியான சேர்றொபர்ட்வில்மட் ஹோட்டன் (Sir Robert Wilmot Horton) 1831 – 1837) 150 ஸ்டேர்லிங் பவுண்களை வழங்கி உதவி னார். அதை அடுத்து 1834ஆம் ஆண்டில் சிலோன் கசெட்டியர் (Ceylon Gazaetter) என்ற பெயரில் அவரது நானாவித பல்சுவைக் குறிப்புக்கள் அடங்கிய நூல் வெளியாகிற்று. ஆங்கிலத்தில் வெளியாகிய இந்த நூலில் 500 பிரதிகள் மட்டுமே அச்சிடப்பட்டது. இன்னும் இந் நூலின் பிரதி ஒன்று கொழும்பில் உள்ள றோயல் ஆசியாட்டிக் சொஸைட்டியில்  (Colombo Royal Aiatic Society )உள்ளது.
இந்த நூலின் அருமை பெருமைகளை விளக்கி, அன்றைய தேசாதிபதி லண்டனில் இருந்த காலனிகளுக்கான அமைச்சுக்கு விளக்கமாக குறிப்பு அனுப்பினார். அதற்கு முன்னர் மூலப் பிரதியைப் பார்வையிட்ட கொழும்பு ஒப்சேவர் (Colombo Observer) 1833 மார்ச் 17ஆம் திகதிய, அதன் இதழில் மிகவும் சிறப்பான விமர்சனம் ஒன்றை எழுதி வெளியிட்டதைக் குறிப் பிட்டேயாக வேண்டும்.
செட்டியாரான ஆசிரியர் சைமன் காசிச்செட்டி முதலியார் இந்தத் தீவின் சுதேசவாசி. அவர் இந்த நூலின் மூலம் நிரந்தரமான பாராட்டுதல்களுக்கு பாத்திரமாகி விட்டார். நூலில் வெளிவந்துள்ள தகவல்களை மிகவும் சிரமங்கள் மத்தியில் வெற்றிகரமாக சேகரித்து வெளியிட்டமை அவரின் மனோ உறுதியையும் திடத்தை யும் வெளிக்காட்டுபவையாக அமைந்துள்ளன. இத்தகைய தீவிர முயற்சிகளுக்கு அனேகமாக பாராட்டுக்கள் கிடைப்பது இல்லை. ஆனால் அவருக்கு இந்தப் பாராட்டுதலை தாராள மாக வழங்க வேண்டும். இவ் வாறு தாராளமாக பாராட்டி னால் தான் நாட்டில் உள்ள ஏனைய சுதேசிகளுக்கு இப்படி யாக தீவுக்கு நன்மைபயக்கும் நற் பணிகளில் ஈடுபட முன்வருவர்|| என்று ‘சண்டே ஒப்சேவர்’ விமர்சித்தது.
இதற்கிடையில் புதிதாக இலங்கையில் உருவாக்கப்பட்ட சட்ட நிர்வாக சபையில், இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்த உத்தியோகப்பற்றற்ற தமிழ் உறுப்பினர் குமாரசுவாமி முதலியார் 1836ஆம் ஆண்டு நவம்பர் 07ஆம் திகதி காலமானார்.
எனவே தமிழர்களையும், தமிழ் பேசும் முஸ்லிம்களையும் சட்ட நிர்வாக சபையில் பிரதி நிதித்துவம் செய்ய உத்தியோகப்பற்றற்ற உறுப்பினர் பதவி காலியாகிற்று. கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழர், செட்டிமார், முஸ்லிம்கள் ஆகியோர், முதலியார் சைமன் காசிச்செட்டி அவர்களே இப் பதவி வகிப்பதற்கு பொருத்தமானவர் என்று கருதினார். தேசாதி பதிக்கு மகஜர்களை அனுப்பினர்.
அன்றைய காலத்தில், ஆங்கில அறிவு உள்ளவர்கள் அருகி இருந்தனர். அவ்வாறு ஆங்கில மொழி அறிவு இருந்தாலும், மக்கள் மதிப்புடையவர்களைக் காண்பது கடினமாக இருந்தது.அந்தப் பொறுப்பான நிர்வாக அதிகாரப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட இரண்டாவது தமிழர் என்ற பெருமையும் இவரைச் சேர்ந்தது.
இவர் 1833 ஜூன் 29ஆம் திகதி சட்ட நிர்வாக உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பதவிப் பிரமாணம் செய்தபோது சட்டநிர்வாக சபையின் தலைவரான தேசாதிபதி ஜே.ஏ.ஸ்ருவார்ட் மக்கன்ஸி (1837- 1841) (J.A.Stewart Mackenzie) சபைக்கு இவரையும், அன்று இவருடன் சேர்த்து, பதவிப் பிரமாணம் எடுத்த ஜோர்ஜ் ஒக்லாட் , (Geosrge Aukland) என்ற ஐரோப்பிய வம்சாவழியினரைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினரையும் அறிமுகம் செய்து பாராட்டி உரை நிகழ்த்தினார்.
அக்காலத்தில் சைமன் காசிச் செட்டி தமிழர்களின் நல்வாழ் வில் அக்கறைகாட்டி சட்டநிர்வாக சபையில் உரை நிகழ்த்தினார். அவர் கூறவிரும்புவதை நாசூக்காக எவர் மனதும் புண்படாமல் வெளியிட்ட தன்மைகளையும் சகலரும் பாராட்டினார்கள். இவரது ஆங்கிலப் புலமை அன்றைய தேசாதிபதியான சேர்.கொலின் காம்பெல் (1841 – 1847)
(Sir Colin Campall ) மற்றும் இதர ஆங்கில அதிகாரிகளையும் வெகுவாகக் கவர்ந்தது.சிறந்த நிர்வாகியை சட்ட நிர்வாக சபைக்கு நியமித்ததை லண்டனில் உள்ள காலனிகளுக்கான அமைச்சு அவ்வளவாக வரவேற்கவில்லை. இறுதியில், 1945ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனிகளுக்கான அமைச்சு சைமன் காசிச்செட்டிக்கு இலங்கை நிர்வாக சேவையில் நியமனம் வழங்கிற்று.
சுதேசி ஒருவருக்கு இவ்வாறு நியமனம் வழங்கிற்று. சுதேசி ஒருவருக்கு இவ்வாறு நியமனம் வழங்குவது அரிய செயலாகும். எனவே அவர் இலங்கை சட்டநிர்வாக சபையிலிருந்து ஓய்வுபெற்று, சிலாபம் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சைமன் காசிச்செட்டி முதலியார் இடத்துக்கு மானிப்பாயைச் சேர்ந்த முதலியார் எதிர் மன்னசிங்கம் சட்டநிர்வாக சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
புத்தளம் மாவட்டத்தில் முதலியாராகவும், இறுதியில் பிரதம முதலியாராகவும் பதவி வகித்த காலத்தில் இலங்கை புறக்டர் (நியாய துரத்திரருக்கான) தகைமையும் பெற்று இருந்தபடியால், நீதிபதி பதவியில் அவரால் சிறப்பாக கடமை செய்யக்கூடியதாக இருந்தது.1852ஆம் ஆண்டில் அவரது 45 வயதில் முதலியார் காசிச் செட்டி காலமானார்.இளம்பராயத்தில் காலமாகிய போதிலும், இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிக் குவித்த நூல்கள் ஏராளம். அவைகளில் பல இன்றும் வெளியிடப்படாமல் உள்ளன.
1831ஆம் ஆண்டில் வெளி வந்த நூல்கள்-
01. தமிழர் சாதிப் பகுப்பு முறை
02. புத்தளப் பிரதேசத்து முக்குவர் உற்பத்தியும் வரலாறும்.
03. தமிழ்ச் சடங்குமுறைகள்.
1832இல் வெளிவந்த நூல்கள்-
04. சோனகரின் பழக்கவழக்கங்கள்
05. யாழ்ப்பாணத்தின் பழைய வரலாறு 1658 வரையும்
06. அல்லி அரசாணி வரலாறு
07. முஸ்லிம்களின் சீராபுராண ஆராய்ச்சி.
ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்-
08. திருக்கோணேஸ்வர திருக்கோயில் பற்றிய பழையபாடல்கள்.
09. திருவாதவூரடிகள் புராணத்தின் ஒரு பகுதி
10. மலையகராதி
அவர் பத்திரிகைகளுக்கு எழுதிய ஆராய்ச்சிக் கட்டு ரைகளின் விபரமும் வெளியாகிய திகதியும்
01. குதிரை மலையின் தனித்துவம் (சென்னை அரசாங்க வர்த்தமானியில் – 1830 – செப்ரெம்பர்)
2. மாலைதீவில் உள்ள மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இடையிலான தொடர்புகள் (இலங்கை அரசாங்க வர்த்தமானியில் – 1830 – டிசம்பர்.11)
3. ஜாவா மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் உள்ள தொடர்புகள். (இலங்கை அரசாங்க வர்த்தமானியில் – 1831 பெப்ரவரி,16)
4. கவிராஜா வரதாயனின் மொழிபெயர்ப்பும் திருக்கோணமலையில் உள்ள ஆலய வரலாறும். (இலங்கை அரசாங்க வர்த்தமானிப் பத்திரிகையில் – 1836. நவம்பர், 26)
கொழும்பு ஜேர்ணலில் வெளிவந்த கட்டுரைகள்-
5. அல்லி அரசாணியின் வரலாறு- 1833.மார்ச்,23 (கொழும்பு பிரிண்டில் வெளிவந்தது)
6. பண்டைய எகிப்தியருக்கும் பிராமணர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகள் – 1838
றோயல் ஆசியாஸ்டிக் சங்கத்தின் இங்கிலாந்து வெளியீட்டில் வெளியாகிய கட்டுரைகள்.
7. பரவர்களின் ஆரம்பச் சரித்திரக் குறிப்புக்கள். – 1837
8. தாமனநுவர அழிபாடுகள் பற்றிய குறிப்புக்கள் – 1841
கொழும்பு ஒப்சேவர் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரைகள்-
9. தமிழர் நீதிமொழிகள்; – ஏப்ரல் 1840
10. காசி காண்ட சாராம்சம் – ஏப்ரல் 13 1840
றோயல் ஆசியாட்டிக் சங்க இலங்கைக் கிளையின் வெளியான கட்டுரைகள்-
11. கல்பென்ரைனில் உள்ள சில நாணயங்களின் விவரங்கள் – 1839
12. திருவாதவூரர் புராணத் தின் 6 ஆவது அதிகாரத்தின் மொழிபெயர்ப்பு.
13. யாழ்ப்பாணச் சரிதம், ஆரம்பகாலந் தொடக்கம் ஒல்லாந்தர் இலங்கையை கைப்பற்றிய காலம் வரை
14. தமிழ் புத்தகப் பட்டியல்கள் எழுதிய குறிப்புக்களுடன்
15. முஸ்லிம்களின் கவி நூலான சீறாப்புராணத்தின் ஆய்வு.
பிற இலங்கை வெளியீடுக ளில் வெளிவந்த கட்டுரைகள்.
16. றொடியாக்கள்  (பாஷை விளக்கத்துடன்)
17. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் தத்துவ மேதைகள்
புலவர்கள் பற்றிய குறிப்புக்கள்.
18. தமிழ் மொழி இலக்கியம் பற்றிய குறிப்புக்கள்.
19. வேத ஆலயங்களில் நடைபெறும் ஆராதனை விளக்கம்
20 முகமதிய காவியங்களில் உள்ள ஆதாமின் உற்பத்தியும் வீழ்ச்சியும்
சைமன் காசிச்செட்டியின் பிரசுரமாகாத நூல்கள்-
21. சமஸ்கிருத தமிழ் அகராதி
22. தமிழ்மொழியில் புழக்கத்தில் உள்ள அந்நிய மொழி வார்த்தைகள்.
23. ஆங்கில – தமிழ் அகராதி.
24. தாவரவியல் அகராதி
25. சென்ற 1995ஆம் ஆண்டு பரிசுத்த பாப்பாண்டவர் இரண் டாவது ஜோன்போல் (ii) இலங்கை சென்று பரிசுத்தகராகப் பிரகடனம் செய்த கத்தோலிக்க மத குருவான ஜோசெப்புவாஸ் பற்றிய நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
மேலும் 13 கால மாதமாக உதயாதித்தன்   என்ற தமிழ் மாத சஞ்சிகை ஒன்றை அச்சிட்டும் வெளியிட்டார். இதுவே உண்மையில் இலங்கையில் தமிழ் மொழியில் வெளிவந்த முதற்பத்திரிகை என்ற பெருமையும் பெறுகின்றது. அதையடுத்தே 1848ஆம் ஆண்டே உதயதாரகை, வெளிவந்தது.
இந்த உதயதாரகையே தமிழில் வெளிவந்த முதற்சஞ்சிகை எனசில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் சைமன் காசிச்செட்டி ‘உதயாதித்தனை’ 1841ஆம் ஆண்டு வெளியிடத் தொடங்கினார்.
அவரது பல அரச கடமைகள் எழுத்து ஆராய்ச்சி வேலைகளுக்கு மத்தியில்இ இந்த தமிழ்ச் சஞ்சிகையை அவரால் 13 மாதங்களுக்குப் பின்னர் வெளியிட முடியவில்லை.
இவர் எழுதிய கட்டுரைகள் எல்லாமே ஆராய்ச்சிக் கட்டுரைகளே. அறிஞர்களால் போற்றிப் பேணப்பட்டவையாகும். அவரின் எழுத்துக்கள் முழுவதையும் இங்கே பட்டியல் போட்டு அறியத் தரமுடியாமல் உள்ள தற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டியுள்ளது.
இறுதியாக ஒரு தகவல் சைமன் காசிச்செட்டி அவர்கள் தமிழ்ப்புலவர்கள் வரலாறு பற்றி ஆங்கிலத்தில் தமிழ்ப் புளூட்டாக் ( The Tamil Plutarc ) என்ற நூலில் ஒன்றை எழுதியிருந்தார்.அன்று பழமை மிகுந்த கிரேக்க நாட்டு மூதறிஞராக புளூட்டாக் என்பவர் இருந்தார்.
அந்தக் காலத்துப் புலவர்கள் 46 பேர்களில் வரலாற்றை புளூட்டாக் எழுதியிருந்தார். அதை அடியொற்றி, சைமன் காசிச் செட்டி அவர்கள் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள், தமிழ் தத்துவ மேதைகள், பண்டிதர்கள் ஆகிய 202 பெரியவர்களைப் பற்றி எழுதியிருந்தார்.
இந்த நூல் பின்னர் 1949ஆம் ஆண்டு அவரது பேர்த்தியாரான திருமதி. சிற்றம்பலம் கார்டினரால் மறுபிரசுரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திராவிட மொழிகளின் ஒப்பு இலக்கணம் comparative Crammer of Dravidian Language   என்ற நூலை டாக்டர் றோபர்ட் ஏ. கால்ட்வெல் ((Dr.Robbert A. Caldwell) எழுதினார்.
ஒத்த மொழிகளான தமிழ், மலையாளம்,  துலுகு, கன்னடம், ஆகிய மொழிபேசும் இனத்தவர்களை திராவிடர் என்றும், அவர்கள் பேசும் மொழியை திராவிட மொழி என்றும், சமஸ்கிருத சொல்லால் அறிமுகம் செய்து வைத்தவரே இந்த டாக்டர் கால்ட்வெல் ஆவார்.
இவர், சைமன் காசிச்செட்டியின் தமிழ் மொழித் பாண்டித்தியத்தையும், புலமையையும் அங்கீகரித்துப் போற்றியுள்ளார்.எனவே தமிழ்மொழி, கலாச் சாரம், தமிழர் அரசியல் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறையுடன் உழைத்த முதலியார் சைமன் காசிச்செட்டி என்ற பெருமகனாரை என்றும் நினைவு கூருவோம்.
                                                                                                                                                                               ( முற்றும்)

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net