Subscribe: RSS Twitter
:editor1
2/3/2017
                                                                       (அங்கம் 27 )
எப்பவுமே பேட்டி கொடுக்க முன் வழமையாக பிரபாகரன் கைக்கடிகாரத்தை கழற்றி மேசைபீது வைத்து நேரத்தைப்பார்த்துப் பார்த்துதான் பேட்டி வழங்குவார். பேட்டிக்கான நேரம் முடிவடைந்து விட்டால் உடனடியாக பேட்டி நேரம் முடிவடைந்து விட்டது என எழுந்து சென்றுவிடுவார்.
அவர் கட்டியிருந்த கைக்கடிகாரம் முன்னாள் போராளி சீலனுடையதாகும். பிரபாகரன் வழங்கிய பேட்டிகளில் எப்பொழுதுமே தனது இலட்சியமான தமிழீழத்தை விட்டுகொடுக்கவும், என்ன காரணத்திற்காகவும் இவர் சமரசம் செய்ய விரும்பவில்லை எனத் தெரிய வருகிறது.
அந்தக் காலத்தில் இந்தியா இராணுவ ரீதியில் இலங்கை தலையிடும் என்றும் மேலெலுந்தவாரியாகக் கருத்து நிலவி வந்தது. அது மாத்திரமல்லாது ‘இன்றைய அவசரதேவை என்னவென்றால் தமிழர்களாகிய நாங்களே எங்கள் யுத்தத்தைச் செய்ய வேண்டுமே ஒழிய வெளியாட்கள் அல்ல’ என தெளிவாக கூறி வந்தார்.
இந்தியா இராணுவ ரீதியாக இலங்கை தலையிட வேண்டுமா? என கேட்டபோது எங்களிடம் தைரியம் நம்பிக்கை, திடசங்கற்பம் இருக்கிறது நாங்களே தனித்து நின்று யுத்தம் புரிந்து எங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும். எனவே இந்தியாவினுடைய ஒத்தாசையோ அனுதாபமோ தேவையில்லை.
மேலும், இது சம்மந்தமாகக் கூறுகையில், இந்தியா எங்களுடைய சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் மதிக்க வேண்டும். என்று கூறினார். அந்தக்காலத்தில் இந்திரா காந்தியினுடைய சேவியத் யூனியன் சேர்ந்த வெளிவிவகார கொள்கைகளுக்கு ஏற்ப அமரிக்காவின் தலையீட்டையும் பிரபாகரன் கண்டிக்கத் தவறவில்லை.
அமெரிக்க ஆயுதங்கள் இலங்கையில் குவிக்கப்படுவது தமிழருடைய சுதந்திர இயக்கத்திற்கு மாத்திரமல்ல இந்தியத் தேசிய பாதுகாப்பிற்கும் சவால் என்றார். அமெரிக்கா இலங்கை இரானுவத்திற்கு உதவி செய்து தமிழர்களுடைய விடுதலைப் பாராபட்சத்தை முறியடிப்பது மாத்திரமல்லாது அவர்களது கிழக்குப்பகுதியிலுள்ள திருகோணமலை கடற்படைத் தளத்தை வசம் எடுத்துக் கொள்ளவுமே ஆகும்.
அவ்வாறு ஒன்று நடைபெற்றால் இந்து நமுத்திரப் பிராந்தியம் மாறும். மேலும், இந்தப் பிராந்தியத்தில் போர் மோகம் சூழ்ந்து பதற்ற நிலைகள் உருவாகும் என பிரபாகரன் குறிப்பிட்டார்.
ஒரு சுதந்திர இராட்சியம் இலங்கையில் உருவாக்கப்பட்டால் அந்த இராச்சியம் சோசலிச அமைப்பாகவே இருக்கும். சோசலிசம் எனப் பிரபாகரன் குறிப்பிட்டது சமுக சமத்துவத்தை வற்புறுத்துவதாகவே கருதப்பட்டது. அங்கே மனித சுதந்தரமும் தனிநபர் உரிமைகளும் உத்தரவாதப்படுத்தப்படும்.
எல்லாவிதமான சுரண்டல்களும் அடக்கு முறைகளும் ஒழிக்கப்படும் இது ஒரு சுதந்திர அமைப்பைக் கொண்டது. தமிழீழம் பக்கச் சார்பற்ற நாடாக இருக்கும் இந்தியாவுடனான நட்புறவு பிராந்தியக் கொள்கைகளையும் மதிக்கும் ஒரு நாடாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் இரண்டு மாதத்திற்குள் வேறு ஒரு அறிக்கை வெளியிட்டார் அந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை காட்டமாகச் சாடினார்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித்தலைவர்கள் இந்தியத் துருப்புகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தை பிரபாகரன் எதிர்த்தார். இந்தியப் படைகள் எக்காரணம் கொண்டும் இலங்கைக்கு வரக்கூடாது என தெரிவித்தார்.
இருந்தபோதும், இந்தியாவிக் உதவி நல்லெண்ணம் தேவை என்பதை அவர் சுட்டிக்காட்ட தவறவில்லை.ஆனால் புதுடில்லி இந்தியத் தலைவர் கால்களில் சாஷ்டாங்கமாக விழுவது ஒரு நல்ல அரசாக இருக்க மாட்டாது என்றார்.
1984ம் ஆண்டு பிரபாகரன்முப்பது வயதை அடைந்தார் படிப்படியாக அவர் கொள்கையிலும் முதிர்ச்சி தென்படத் தொடங்கியது.அவருடைய ‘சண்டே’சஞ்சிகை பத்திரிகையாளர்கள் அவரைப் பேட்டியெடுக்க தமது விருப்பத்தைத தெரிவித்தார்கள். சண்டே சஞ்சிகைப் பேட்டி பத்திரிகை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று.
அந்தப் பேட்டியின் சென்றவாரப் பேட்டியின் தொடர்ச்சி கீழே தரப்படுகின்றது.

கேள்வி: உங்கள் வாழ்க்கையில் மிகுந்த விரக்தியைத் தந்த கணம் என னதையாவது கூறுவீர்களா?

பதில்: என் வரழ்க்கையில் அப்படி விரக்தி ஏற்பட்ட கணம் என்று எதையும் குறிப்பிட்டுக் கூற முடியாது.இலட்சிய நோக்கு கொண்டவர் என்று நம்பிய சில நண்பர்கள் சந்தர்ப்பவாதிகளாயும் சுயநலவாதியாயும் மாறியபோது விரக்திக்குள்ளாவதுண்டு .
போராட்டத்தின் ஒரு அங்கம் தான் குறிப்பிட்ட ஒரு இராணுவ நடவடிக்கை தான் முழுக்கலவரத்திற்கும் காரணம் என்று கருதுவது தவறானதாகும்.ஜூலைக்கலவரமானது எம் மக்களை கொன்று குவிக்கும் நோக்கம் மட்டும் கொண்டதல்ல. கொழும்பில் கொழும்பில் வாழுகின்ற பொருளாதாரத்தை தளத்தையே அழித்து விடுவதையும் நோக்கமாக கொண்டிருந்ததையும் நிச்சயமாக அவதானித்திருப்பீர்கள்.
எங்களுடைய கண்னோட்டத்தில் ஜூலைப் பேரளிவானது ஆளும் கட்சிகளின் இனவெறிச் சக்திகளால் தமிழர்களுக்கெதிராக நன்கு திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட இனப் படுகொலை திட்டமாகும்.
ஆரம்பத்தில், இந்த வெறிக்கும்பல் முழுக்குற்றச்சாட்டையும் புலிகள் மேல் சுமத்த முனைந்தது. பிறகு திடீரென்று தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு இடது சாரிகளே காரணமாகும் என்று குற்றம்நாட்டியது. உண்மையில் எமது மக்களின் பாரிய இழப்பிற்கும் அவர்களின் உடமை நாசத்திற்கும் இன்றைய அரசாங்கத்தின் இனவெறிப்பிடித்த தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி: ஏன் நீங்கள் இந்தத் தாக்குதலை நடத்தினீர்கள்?

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன நான்கு தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டதற்கு எதிராக ஒரு பமிவாங்கல் நடவடிக்கை தான் இது என்று சிலர் கூறுகின்றனர். நான் விசாரித்த வரையில் உங்கள் இராணுவப்பிரிவுத் தலைவரும், நெருங்கிய நண்பருமான சார்லஸ் அன்ரனியின் மரணத்தில் வெற்றிப்பெருமிதம் கொண்டிருந்த சிங்கள இராணுவத்திற்குப் பாடம் படிப்பிற்பதற்காகத்தான் இத் தாக்குதல் நடந்தது என்று தோன்றுகிறது.
அதாவது விடுதலைப் புலிகள் இதன் அதன் ஆற்றல் மிகுந்த தலைவர்களில் ஒருவரை இறந்துவிட்ட பிறகும்கூட சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளக் கூடிய வலிமை கொண்டிருகிறது என்பதை நீங்கள் நிரூபிக்க முயன்றிருக்கின்றீர்கள் என்று நான் கருதுகிறேன். அந்தக் கருத்து சரியா? இல்லது இதை விடவும் கூடுதல் காரணங்கள் உண்டா?
பதில்: சார்ஸ் அன்ரனி பற்றியும், இத்தாக்குதல்கள் பற்றியும் நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இத் தாக்குதல் பதிலடிதான் சிங்கள இராணுவத்திற்கு தண்டனைதான். இருப்பினும் எங்களைப் பொறுத்தவரை சார்லஸ் போன்ற உன்னதப் புரட்சிவாதி விடுதலை வீரனின் உயிருக்குப் பதினமூன்று இராணுவத்தினரின் உயிர்கள் ஒருபோதும் ஈடாகாது. வேறொரு வகையில் எதிரியை நோக்கித் தொடுக்கப்பட்டிருக்கும் கெரில்லாப் போர் முறையின் ஒரு பகுதி தான் இத்தாக்குதலாகும்.

கேள்வி: வட்டமேசை மாநாடு எந்தவித நிரந்தரமான தீர்வையாவது உருவாக்கும் என்று நம்புகிறீர்களா?

பதில்: தமிழர்கள் பிரச்சனைக்கு வட்டமேசை மாநாடு எந்தவித தீர்வையும் தராது என்பது என் கருத்து.கடந்த கால அரசியல் அனுபவத்திலேயே இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இச் சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண எந்தவித நேர்மையான முயற்சியையும் மேற்கொண்டதில்லை. இப்போதைய பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தக் கதி தான் நேரும் முக்கியமான சகல சிங்களக் கட்சிகளும் பௌத்தஅமைப்புகளும் தமிழர்களுக்குப் பிரதேச சுயாட்சியை எந்த வடிவத்திலும் எந்த அளவில் தரத் தயாரக இல்லை. சிறு சலுகைகள் வழங்குவதைக் கூட அவர்கள் எதிர்க்கிறார்கள். அம் மாநாட்டிலிருந்து உருப்படியாக எதுவும் கிடையாது.

கேள்வி: தமிர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா?

பதில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாக பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல திட்டவட்டமான நடவடிக்கைள் எதனைளும் அவர்கள் ஒருபோதும் எடுத்ததில்லை. மாறாக அவர்கள் பொய்யான நம்பிக்கைகளைத் தருகிறார்கள்.பிரம்மைகளை ஏற்படுத்துகிறார்கள்.
எமது மக்களை தொடர்ந்து அடிமைத் தனத்திலேயே வைத்திருக்க முனைகிறார்கள்.அவர்கள் தங்கள் சுயநல அபிலாசைகளை அடையவே அரசியலில் நுழைந்தார்கள்.ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்கான உண்மையான நோக்கம் எதனையும்’அவர்கள் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. அத்தோடு எந்தவிதமான உருப்படியான அரசியல் வேலைத்திட்டத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
இந்த விடுதலைப் போராட்ட வழியில் மாட்டிக் கொள்வார்கள் என்று அவர்கள் ஒருபொழுதும் எதிர்பார்க்கவில்லை. புரட்சியின் ஜூவாலை தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிகிறது. இதை அணைக்க அவர்கள் தங்களாலான மட்டும் முயன்று பார்க்கிறார்கள். இந்த அர்த்தத்தில் அவர்களை துரோகிகள் என வர்ணிக்கலாம்.

கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பப் பயப்பிடுகிறார்கள் என்பதற்கு காரணம் சிங்களவர்கள் அல்ல. புலிகள் தான் என்கிறார்களே இது உண்மையா?

பதில்: அவர்கன் பயப்படுவது புலிகளுக்கல்ல. சுதந்திர தமிழகம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களித்த மக்களின் கோபாவேசத்துக்கு தான் அவர்கள் பயப்படுகிறார்கள்.

கேள்வி: இந்தியாவின் நல்லெண்ண முயற்சி உருப்படியான தீர்வு எதையும் தருமா?

பதில்: இந்தியாவின் நல்லெண்ண முயற்சிகள் எம் மக்களுக்கும் ஆக்கபூர்வமான நம்பிக்கையைத் தந்திருக்கின்றன. ஆனால் சிங்கள இனவெறி அரசு தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்க இந்த உதவியை பயன்படுத்திக் கொள்ளும் என நான் நினைக்கவில்லை.

கேள்வி: இந்த மாதிரி நிலைமையில் தமிழர்களுக்கு உதவ இந்தியா செய்யக்கூடிய மிகச் சரியாக காரியம் எதுவாக இருக்க வேண்டும்?

பதில்: எம் மக்களின் நியாயமான நேரிய கோரிக்கைகளை இந்திய அரசு அங்கீகரித்து சுயநிர்ணயத்திற்கான எங்கள் உரிமையினை ஏற்க வேண்டும்.

கேள்வி: இந்தியாவின் இராணுவம் இதில் தலையிட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: எமது சுதந்திரத்தை நாமே போராடி வென்றெடுக்கும் மனோதிடமும், நம்பிக்கையும்,உறுதியும் எங்களுக்கு உண்டு. நாமே போராடி எம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். எனினும் எமக்கு இந்தியாவின் ஆதரவும் அனுதாபமும் அவசியமாகிறது.

கேள்வி: ஜனாதிபதி ஜெயவர்த்தன பற்றி உங்களின் தனிப்பட்ட மதிப்பீடு என்ன?

பதில்: ஜெயவர்த்தன ஓர் உண்மையான பொளத்தராக இருப்பாராயின் நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திராது.

கேள்வி: இந்தப் பேச்சுவார்த்தை ஜெயவர்த்தன மேற்கொள்ள நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள்? காலம் கடத்தப் பார்க்கிறாரா?

பதில்: இச் சமாதானபேச்சுவார்த்தை ஜெயவர்த்தன நடத்துவதற்கு பல காரணங்கள் உண்டு. முதலில் இநடதியர்கள் கோபத்தைத் தணிப்பது. இரண்டாவது இனக்கலவரங்கள் அலங்கையின் பெயருக்கு ஏற்படுத்திய பெரும் களங்கத்தை நீக்குவது. மூன்றாவது நிதியுதவி ரும் மேற்கத்தேய ஸ்தாபனங்களிலிருந்து உதவி பெறுவது. கால அவகாசம் பெற்று சிங்கள இராணுவ இயந்திரத்தை பலப்படுத்துவது.

கேள்வி: தன்னுடைய அமைந்நில் இருக்கும் தீவிரவாதிகளின் பிடிக்குள் ஜனதிபதி சிக்கிக்கொண்டிருக்கிறாரா? அல்லது தன்னிச்சையாகவே இயங்குகிறாரா? அல்லது மதகுருமாரால் நெருக்கப்படுகிறாரா?

பதில்: ஜெயவர்த்தன சுயமாகத்தான் இருக்கிறார். அவருக்கு சர்வ அதிகாரங்களுமுண்டமே அமைச்சரவையின் தீவிரவாதிகளும் பொத்த குருமார்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

கேள்வி: இலங்கையில் பௌத்த குருமார்கள் என்ன பங்கு வகிக்கிறார்கள்?

பதில்: சிறிலங்காவின் அரசியல் போக்குகளை நிர்ணயிப்பதில் பௌத்த குருமார்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. சிங்கள் மக்கள் மத்தியில் தமிழருக்கு எதிரான இனவெறியைத் தூண்டி விட்டதில் அவர்கள் மிக மக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.

கேள்வி: ஸ்ரீலங்காவை தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றும் முயற்சியில் பௌத்த குருமார்கள் கணிசமான வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

பதில்: சிறிலங்கா ஏற்கனவே ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடுதான். இதில் பௌத்த பிக்குகளுக்கு பெரும் பங்குண்டு .

கேள்வி: இது பௌத்த குருமார்களின் இனவெறியின்விளைவா? அல்லது கிறிஸ்தவ குருமார்கள் தமிழர்களுடன் ஒன்றுபட்டதன் விளைவா?

பதில்: இந்த இனவெறி அரசை ஸ்திரப்படுத்துவதில் பௌத்த குருமாருக்கு முக்கிய பங்குண்டு. கிறிஸ்தவ பாதிரிமார்கள் திழர் பிரச்சனைக்கு அனுதாபம் காட்டுகிறார்கள்.ஆனால் சிங்கள கிறிஸ்தவ பாதிரிமார் சிங்களப் பெரினவாத வெறுப்புணர்வை வெளிப்படுத்தித்தமிழர் கோரிக்கைகளை வெறுக்கிறார்கள்.

கேள்வி: உலக விடுதலை இயக்கங்களுடன் உங்களுக்கு தொடர்பு உண்டா? எந்த அமைப்பு உங்களுக்கு பயிற்சியும் ஆயுத உபகரணங்களும் தந்துதவுகின்றன?

பதில்: உலகின் ஏனைய அயக்கங்களுடன் எங்களுக்கு தொடர்பு உண்டு.உங்களின் இரண்டாவது  கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

கேள்வி: உங்களின் இந்தப் போராட்டத்திற்கு எந்த நாடு மிகவும் அனுசரணையாக அமைகிறது.

பதில்:இது பற்றி ஒன்றும் நான் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: உங்கள் சித்தாந்த கோட்பாடு என்ன?

பதில்: புரட்சிகர சோசலிசம்.

கேள்வி: எதிர்காலத்தில் தமிழர்கள் மீது தாக்குதலை எதிர்பார்க்கிறீர்களா?எந்தக் காரணத்தை முன்னிட்டு?

பதில்: ஆம், நான் எதிர்பார்க்கிறேன். திருகோணமலையிலும் வவுனியாவிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களை கொல்லுவதற்கான ஒரு நாசகரத் திட்டத்தை இனவெறிபிடித்த பாசிச சக்திகள் உருவாக்கி வருகின்றன. தங்களது உயிர்களையுத் உடமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த  ஒரு  தேசிய இராணுவத்தின் உதவியுடன் சுதந்திரமான தமிழீழநாடு நிறுவப்பட்டால் ஒழிய ஒருபோதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை.

கேள்வி: கெரில்லாக்களுக்கு எதிரான போர் முறைகளில் சிங்கள இராணுவத்திற்கு இஸ்ரேலியர்கள் பயிற்சி தருகிறார்கள் என்பது உண்மையா?

பதில்: இதுவரை இலங்கையில் இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் இருப்பதைப் பற்றி நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை இப்படிப்பட்ட செய்திகள் உண்மையாக இருந்தாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.
சிறிலங்கா அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கும் அதன் கூலிகளுக்குமான ஒரு தளமாக விரைவாக மாறிக்கொண்டு வருகிறது.பயிற்சி தருபவர்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிபுணத்துவம் எத்தகையதாக இருந்தாலும் விடுதலைப் புலிகளிக மனோதிடத்தையும் உறுதியையும் அழித்துவிட சிங்கள இராணுவத்தால் முடியாது மகத்தான தார்மீக வலிமையும், தியாக உணர்வும் உன்னத இலட்சியப்பற்றும் எங்களுக்குண்டு.

கேள்வி: அமெரிக்காவிலிருந்து சிறிலங்காவிற்கு பெருமளவிலான ஆயுதங்களும் உபகரணங்களும் வந்து குவிவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்த ஆயுதக் குவிப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியது. சிறிலங்கா இராணுவத்திற்கு உதவி செய்து தமிழீழ போராட்டத்தை நசுக்குவது மட்டும் அல்ல அமெரிக்காவின் நோக்கம் என்பது உங்களுக்கு தெரிந்ததே. திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை அமைத்துக்கொள்வது அமெரிக்காவின் ஏகாதிபத்திய கபட நோக்கம்.
இது இந்து சமுத்திரப் பகுதியை யுத்தப்பிராந்தியமாக மாற்றுவதுடன் அப்பிரதேசத்தில் நெருக்கடியை உண்டு பண்ணும்.

கேள்வி: எப்படியோ ஒருகாலம் தமிழகம் கைகூடி விட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழீழம் ஒரு சோசலிச நாடாக அமையப்பெறும் சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமுக அமைப்பை நான் கருதுகிறேன். இது மனித சுதந்திரத்திற்கும் தனிநபர் உரிமைக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளும் சுரண்டலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது நிகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாச்சாரத்தைமேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கின்ற ஒரு சுதந்திரச் சமூகமாக தமிழீழம் அமையும்.
இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேரா கொள்கையை கடைப்பிடிக்கும். அத்தோடு இந்தியாவோடு நெச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக் கொள்கையைக் கௌரவிக்கும்.

கேள்வி: உங்கள் கணிப்பில் தமிழீழத்தை எப்பொழுது அடைவீர்கள்?

பதில்: விடுதலைப் போராட்டத்திற்கு கால வரையரையோ அல்லது ஒரு பூர்வாங்கத் திட்டமோ இருக்கமுடியாது தமிழீழத்திலும் உலக அரங்கிலும் உருவாக்கும் நிலைமைகளைப் பொறுத்து இது அமையும்.
(தொடரும்…)
   -தினச் செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net