Subscribe: RSS Twitter
:editor
14/3/2017

 

திரு. அல்பிரட் துரையப்பாவின் பிரிவு

மேலும் அந்த இறப்புகளுக்கும் கலவரத்திற்கும் முழுப்பொறுப்பும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் திரு.அல்பிரட் துரையப்பாவே என்று இலங்கைத்
தமிழரசுக் கட்சியைச்; சேர்ந்தவர்கள் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள்.
ஆனால், அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முதல்நாளே திரு.அல்பிரட் துரையப்பா, பருத்தித்துறை நகரசபை தலைவர் திரு.என்.நடராசா, நெல்லியடி மகாத்மா தியேட்டர் முதலாளி திரு.வல்லிபுரம்,மற்றும் நானும் எனது மோட்டார் வாகனத்தில் கொழும்புக்கு சென்றிருந்தோம். அந்த நிகழ்ச்சி நடைபெறும் போது திரு.அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணத்தில் இருக்கவே இல்லை. ஆனால் அவரைக் கூட்டத்தில் கண்டதாகவும், அவர் பொலிசாருக்குக் கூறி கூட்டத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
அதை அடுத்து, திரு.துரையப்பா மீது காரசாரமான அவதூற்றுப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இறுதியில், 27 யூலை 1975ஆம் ஆண்டு, திரு.அல்பிரட் துரையப்பா பொன்னாலை வரதராசப்பெருமாள் கோயி லுக்கு சாமி கும்பிடப் போனபோது, துப்பாக்கிதாரி இளை ஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொதுமக்கள் செல்வாக்கு நிறைந்த யாழ்ப்பாண மேயர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியையும், அதிர்வு அலை களையும் உருவாக்கியது. இந்தக் கொலையை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்; திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் செய்தார் என்று செய்திகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.
அந்த தகவல் தவறானது. அந்தக் கொலையின் உண்மை நிலையை ‘கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி ணக்க ஆணைக்குழுவுக்கு, ( Lessons Learnt and Reconciliation Commission) முன்னிலையில் நான் 11 அக்டோபர் 2010ஆம் ஆண்டு சாட்சியமளிக்கும் போது, திரு.அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்கொலை செய்தது திரு.அமிர்தலிங்கத்தின் மூத்த மகனான காண்டீபன்தான்; என்ற உண்மையை வெளிப்படுத்தினேன்.
திரு.அல்பிரட் துரையப்பாவின் கொலையை விசாரித்த முன்னாள் உதவி பொலிஸ் மாஅதிபர் திரு.ஆர்.சுந்தர லிங்கம், எனது கூற்று சரியானது என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டு, உறுதிப்படுத்தினார்.
திரு.அமிர்தலிங்கமும், அவரது மகன்களில் ஒருவரான காண்டீபனும் திரு.அல்பிரட் துரையப்பா மீது கொண்ட விரோதத்தை துப்பாக்கியால் தீர்த்துக் கொண்டார்கள். திரு.துரையப்பாவின் கொலையை அடுத்து, தலைமறைவான காண்டீபன் இந்தியா சென்று, அங்கிருந்து இலண்டன் போய்ச் சேர்ந்தார். இன்றுவரை ஸ்ரீலங்காவுக்கு அவர் திரும்பி வரவேயில்லை. ஆனால் திரு.அமிர்தலிங்கத்தின் இரண்டாவது மகனான டாக்டர் பகீரதன், மற்றும் அவரது மனைவி காலஞ்சென்ற திருமதி. மங்கயற்கரசி ஆகிய இருவரும் அதன்பின் பலமுறை இலங்கைக்கு வந்து சென்றிருக்கின்றார்கள்.

இந்திய வம்சாவழியினரின் பிரச்சினை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல், இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைகளை மிகவும் சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது. இன்று ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் நாடு அன்று இலங்கை என்று அழைக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, 1947ம் ஆண்டு, முதல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடை பெற்றது.
இலங்கை நாடாளுமன்றம் – சனப் பிரதிநிதிகள் சபை, செனேற் சபை என்று இரு சபைகளைக் கொண்டது.சனப் பிரிதிநிதிகள் சபைக்கு 95 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 06 பேர் நியமிக்கப்பட்டனர்.
சனப்பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் வாக்கெடுப்பு 1947ம் ஆண்டு ஆகஸ்டு 23ம் திகதி தொடக்கம், 20 செப்டெம்பர் 1947 வரை நடைபெற்றது.
தேர்தலை அடுத்து, முதல் நாடாளுமன்றம் 14 அக்டோபர் 1947ல், வைபவரீதியாக கூடிற்று.
நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் 7 பேர்;; வெற்றி பெற்றார்கள். திரு.சௌமியமூர்த்தி தொண்ட மான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கி ரசைச் சேர்ந்த 7 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள்.
அவர்கள் விபரமும், போட்டியிட்டு வென்ற தொகுதிகளும் வருமாறு –
திரு.எஸ் தொண்டமான்- நுவரேலியா
திரு.ஜோர்ஜ் ஆர். மோத்தா –மஸ்கெலியா
திரு.கே.ராஜலிங்கம் -நாவலப்பிட்டிய
திரு.கே. குமாரவேலு –கொட்டகல
திரு.எஸ்.எம் சுப்பையா- பதுளை
திரு.சி.வி வேலுப்பிள்ளை- தலவாக்கொல்ல
திரு.டி. ராமனுஜம்- அளுத்நுவர
நடைபெற்ற தேர்தலை அடுத்து, பெரும்பான்மையாக 42 ஆசனங்களை வென்ற டி.எஸ் சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க முன்வந்தது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்கள் இல்லாத படியால் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை தம்முடன் சேருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு.டீ.எஸ் சேனநாயக்கா வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் திரு.தொண்டமான் அந்த வேண்டுகோளுக்கு மதிப்பளிக்காமல், டாக்டர் திரு.என்.எம்.பெரேராவின் தலைமையிலான லங்கா சம சமாஜக் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன் வந்தார்;.
இலங்கை 1948ம் ஆண்டு பிப்பிரவரி மாதம் 04ம் திகதி, டொமினியன் அந்தஸ்து பெற்ற நாடாக, பிரிட்டிஸ் காலணித்துவ ஆட்சியாளரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதாவது, இலங்கை ஓர் சுதந்திரம் அடைந்த நாடு என்று அறிவிக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததை அடுத்து, திரு.டி.எஸ்.சேனநாயக்காவின் தலைமையிலான அரசு, இலங்கைக்கான குடியுரிமைச்சட்டம் இலக்கம் 08 ஐ 1948ல்; நிறைவேற்றிற்று. அத்துடன் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் திருத்துச் சட்டம் இலக்கம் 48, 1949, மற்றும் இந்திய பாகிஸ்தான் குடியுரிமை (பிரசாவுரிமை) சட்டம் இலக்கம் 30, 1949, ஆகிய சட்டங்களை நிறைவேற்றியது. இவ்வாறு நிறைவேற்றிய சட்டங்களை அடுத்து, அப்பொழுது இலங்கையில் வாழ்ந்த எட்டு லட்சம் (800, 000) இந்திய வம்சாவழித் தமிழர்கள் பிரசாவுரிமையை இழந்தனர். அத்துடன் அவர்கள் தங்கள் குடியுரிமையையும், வாக்குரிமையையும் இழந்தார்கள்.
அதை அடுத்து, திரு.தொண்டமானும் இலங்கை தொழிலா ளர் காங்கிரசும் பலவிதமான போராட்டங்களை நடாத் தினார்கள். திரு.டீ.எஸ் சேனநாயக்காவின் தலைமை யிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி மசிந்து கொடுக்கவே இல்லை.
சத்தியாக்கிரகம் இருந்தார்கள்.வழக்குத் தொடர்ந்தார்கள். இலங்கையில் உள்ள நீதிமன்றங்களில் இ.தொ.க தொடுத்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதை அடுத்து லண்டனில் உள்ள பிறிவிக் கவுன்சிலில்(Privy Council) வழக்குத் தொடர்ந்தார்கள். அங்கும் அவர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியாகியிற்று.
அதன் பின்னர் இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவழியினர், ‘நாடு, மற்றும், வாக்கு உரிமை அற்றவர்களாக, வசித்து வந்தார்கள்.
1960ம் ஆண்டு முதற் தேர்தலில் ஸ்ரீமா பண்டாரநாயக்க வென்று ஆட்சி அமைத்த பின்னர், இந்த இந்திய வம்சாவழியினரின் பிரச்சினைக்கு முடிவு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அன்றைய இந்தியப் பிரதமர் திரு.லால் பகதூர் சாஸ்திரியின் அழைப்பை ஏற்று, 24 அக்டோபர் 1964 ஆம் ஆண்டு, பிரதமர் திருமதி.ஸ்ரீமா பண்டாரநாயக்கா தலைமையில், அமைச்சர்களான திரு.ரி.பி.இலங்கரத்தின, திரு.பீலிக்ஸ் பண்டாரநாயக்கா, மற்றும் திறைச்சேரி செயலாளர் திரு.ஷேர்லி அமரசிங்க ஆகியோர் அடங்கிய தூது கோஷ்டி புதுடில்லி சென்றது.
இந்தியா சென்ற திருமதி ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் தலைமையிலான தூது கோஷ்டி, இந்தியப் பிரதமர் திரு.லால் பகதூர் சாஸ்திரியின் தலைமையில், அவரது அமைச்சர்கள் அங்கம் வகித்த தூது கோஷ்டியுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்.
இறுதியில் 30 அக்டோபர் 1964ம் ஆண்டு, இந்திய-இலங்கை உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி –

இந்த உடன்படிக்கையின்படி

• அக்டோபர் 1967ம் ஆண்டளவில் நாட்டில் 975,000 இந்திய வச்மாவழித் தமிழர்கள் வசிக்கின்றார்கள் என்ற கணக்கின் அடிப்படையில் தீர்வுகள் எட்டப் பட்டன.
• இந்திய அரசு இலங்கையில் வசித்து வந்த 525,000 இந்திய வம்சாவழியினரை இந்தியாவுக்கு அழைத்து இந்தியா பிரசாவுரிமையை வழங்குவது என்று அறிவித்தது.
• இந்தியா பிரசாவுரிமையை 15 வருட காலத்துக்குள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
• அதேபோல்,இங்கு வசித்து வரும் 300,000 இந்திய வம்சாவழி தமிழருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பிரதமர் திருமதி ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் தீவிரமான முயற்சியால், இலங்கையில் நாடற்றவர்கள் என்ற பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
இன்று மலைநாட்டில் உள்ள தமிழர்கள் வாக்குரிமையையும், தேர்தலில் போட்டியிடும் உரிமைகளையும், மீண்டும் பெற்றார்கள் என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியின் முயற்சி என்று கூறுவதில் தவறில்லை.
மீண்டும் 1970 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், கட்சித் தலைவியும் பிரதமருமான திருமதி. ஸ்ரீமா பண்டாரநாயக்கா புதுடில்லி சென்று இந்தியப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியைச் சந்தித்து, எஞ்சியுள்ள இந்திய வம்சாவழியினரின், பிரச்சினைகள் பற்றி வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை நடாத்தி விட்டு 29 ஜனவரி 1974 ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார்.
முன்னைய ஒப்பந்தத்தில் இந்திய வம்சாவழியினரின், பிரச்சினைகள் பற்றி முடிவு செய்யப்பட்டது. அதன் பிரகாரம் மொத்தமாக முடிவு செய்யாமல் விடப்பட்ட 150,000 இந்திய வம்சாவழியினரில், 75,000 பேர்களை இந்தியாவிற்கு திருப்பி; அழைப்பது என்றும், மீதம் உள்ள 75,000 பேர்களுக்கும் இலங்கைப் பிரசாவுரிமையை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு ஒப்பந்தத்தை அடுத்து, இலங்கையில் நாடற்றவர்கள் என்ற பிரச்சினைக்கு முடிவு கொண்டு வரப்பட்டது.
மலைநாட்டில் வாழும் தமிழர்கள், இன்று நாட்டின் ஏனைய மக்களைப் போல, பிரசாவுரிமை, வாக்குரிமை ஆகியவற்றைப் பெற்று வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறு வாழ்வதற்கு முக்கிய காரணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிதான் என்பதை இன்று பலர் மறந்து விட்டார்கள். அந்த விடயங்களை நினைவு கூரவே இங்கே இதனைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

கச்சதீவு

நீண்டகாலமாக தீர்க்கப்படாத சர்வதேச பிரச்சினைகளை எல்லாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி திருமதி ஸ்ரீமா பண்டாரநாயக்கா இலாவகமாக தீர்த்து வைத்தார்.
இவ்வாறு தீர்க்கப்பட்ட முக்கிய விடயம் இலங்கை-இந்திய கடல் எல்லையும், கச்சதீவும் சம்பந்தப்பட்டதாகும்.
இது சம்பந்தமாக,இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் நடைபெற்ற முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றுதான் 26 ஜூன் மாதம் 1974ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, பாக்கு நீரிணையில் இந்தியா-இலங்கை சம்பந்தப்பட்ட கடல் எல்லைகள் நிர்ணயிக்கப் பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், கச்சதீவு என்கின்ற சிறிய தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று பிரகடனப்படுத் தப்பட்டது. கச்சதீவு ஒரு சிறிய தீவு. மொத்தமாக 68 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்டது. இந்தத் தீவு இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து, 11 கடல் மைல்களுக்கு அப்பால் தெற்கே உள்ளது. மேலும் இந்தியாவின் மேற்குப்பக்க கடல் எல்லையிலிருந்து,01 கடல் மைல் அளவில் இலங்கையின் கடல் எல்லைக்குள்; உள்ளது.
இந்த கச்சதீவு, நெடுந்தீவிலிருந்து 18 கடல் மைலுக்கு அப்பால் இலங்கை கடல் எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை – இந்தியா ஆகிய நாடுகள் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்த காலம் தொட்டு, கச்சதீவு, நெடுந்தீவின் 4 வது வட்டாரமாக இருந்து வந்தது.
இந்தத் தீவில், மனிதர்களோ,மிருகங்களோ, பறவைகளோ இல்லை. ஆனால் அங்கே அந்தோனியார் தேவாலயம் ஒன்று உண்டு. இந்தத் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். நெடுந்தீவின் பங்குத் தந்தையே இந்த அந்தோனியார் தேவாலயத்தின் பூசைகளை நடாத்துவார்.
மேலும் இந்தத் தேவாலயத்தின் நிர்வாகத்தினை நெடுந் தீவைச் சேர்ந்த பரம்பரை பரம்பரையாக வரும் மூப்பரே செய்வார்.
மேலும்,1974ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒப்பந்தம் மன்னார்குடா, மற்றும் வங்காள விரிகுடா ஆகியவற்றின் கடல் எல்லைகளையும் நிர்ணயித்தது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கடல் எல்லைக்கு வெளியே மீன்பிடிக்கக் கூடாது என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் 1974ஆம் ஆண்டின், ஒப்பந்தத்தின்படி. இந்திய மீனவர்கள் கச்சதீவுப் பகுதியில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.வேண்டுமாயி;ன் அவர்கள் கச்சதீவு தேவாலயத்தில் அமைந்துள்ள பகுதியில் தங்கள் மீன்பிடி வலைகளை உலர விடலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது.
அது மாத்திரமில்லாமல், வருடா வருடம் நடைபெறும் அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு, இந்திய மீன வர்கள் எந்தவிதமான ‘விசா’வும் இல்லாமல் வந்து கலந்து கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபடலாம் என்றும் குறிப் பிடப்பட்டு இருந்தது.
ஆனால் 3 மார்ச் 1976ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், அவரவர் கடல் எல்லைக்குள் மட்டுமே மீன்பிடிக்கலாம் என்று திட்டவட்டமாக வரைய
றுக்கப்பட்டது. மேலும் 1976ம் ஆண்டின் ஒப்பந்தத்தில் இந்தியா மீனவர்கள் கச்சதீவிற்கு சென்று தங்கள் வலை களை உலர விடலாம் என்ற ஷரத்தும் நீக்கப்பட்டது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும் பிரதமர் திருமதி.ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் நேரடி ஆலோசனையை தொடர்ந்து வெளிவிவகார, மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த திரு.டபில்யூ.ரி.ஜெயசிங்காவினால் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தை களை அடுத்து நிறைவேற்றப்பட்டது.
இந்த இரண்டு ஒப்பந்தங்களும் இலங்கையின் இராஜ தந்திர முயற்சிக்கு கிடைத்த பெரிய வெற்றிகளாகும்.
ஆனால் இன்று இந்தியப் பத்திரிகைகள் மாத்திரமல்லாமல், இலங்கையில் உள்ள சில தினசரிகளும், தமிழ் மாத்திரமல்ல, ஆங்கில தினசரிகளும், கச்சதீவை, இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது என்று தப்புத்தப்பாக எழுதியும், பிரசுரித்தும், வருகின்றன.
கச்சதீவு எப்பவுமே இலங்கையின் ஆதிக்கத்திற்குள் இருந்த சிறிய தீவு என்பதை திருமதி. ஸ்ரீமா பண்டார நாயக்கா இந்தியாவுக்கு ஆதாரபூர்வமாக எடுத்துக் கூறி இந்தியாவை ஏற்றுக்கொள்ள வைத்தார்.
கச்சதீவு இலங்கைக்கு தான் சொந்தம் என்பதை உல கத்திற்கு எடுத்துக் கூறும் நோக்கத்துடன் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் எனது ‘ஏசியன் ரிபியூன்’
( Asian Tribune)பத்திரிகையினருடன் கச்சதீவு சென்று அங்கே இலங்கைக் கொடியை நாட்டி வைத்தேன். அநேகமாக கச்சதீவில் இலங்கைக் கொடியை நாட்டிய ஒரே இலங்கையன் நானாகத் தான் இருக்கும் என்று நம்புகின் றேன்.
கச்சதீவு, மக்கள் குடியேற்றம் எதுவுமே இல்லாத சிறிய தீவாக இருக்கலாம். ஆனால் அது எமது நாட்டின் ஓரு அங்கம் என்பதை திருமதி.ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் நிலைநாட்டியுள்;;ளதை இங்கே குறிப்பிடாமல் விட இயலாது.
(தொடரும்..)
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net