Subscribe: RSS Twitter
:editor
16/3/2017
அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சசிகலாவின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாட்டு மனு கையளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு சசிகலா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் அறிவித்தலுக்கு அமைய ஓ.பி.எஸ் தரப்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில், சசிகலாவின் நியமனம் தொடர்பாக எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் முடிவு அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-தினச்செய்தி-

 

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net