Subscribe: RSS Twitter
:editor
16/3/2017
ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமாக டொயோடா, தனது செயற்பாடுகளுக்காக பிரித்தானியாவில் 240 மில்லியன்ஸ் பவுண்ட்ஸ்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி புதிய உலக உற்பத்தி முறைகளை பயன்படுத்தி தனது வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக டெர்பி அருகே அமைந்துள்ள பேர்னஸ்டன் ஆலையை மேம்படுத்துவதற்காக இந்த முதலீட்டினை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பேர்னஸ்டன் ஆலையின் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், இங்கிலாந்தின் விநியோக செயற்திறனை ஊக்குவிக்கவும் டொயோடாவின் முதலீடுகள் பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் கார் உற்பத்திகளை மேற்கொள்ளும் டொயோடா பேர்னஸ்டன் ஆலையில், ஆரிஸ் மற்றும் அவென்ஸிஸ் மாதிரி கார்களை வடிவமைக்கின்றது. கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது.
டொயோடாவின் வாகனங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஏனைய சில நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net