Subscribe: RSS Twitter
:editor
17/3/2017
முத்துகிருஷ்ணனின் தற்கொலை தொடர்பில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் ஆட்சியாளர் சம்பத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட குறித்த மாணவனின் சடலத்திற்கு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆட்சியாளர் சம்பத்,சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சௌண்டப்பன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, முத்துகிருஷ்ணனின் உறவினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தனர். அதற்கு ஆட்சியாளர் சம்பத் ஒப்புதல் அளித்ததுடன் இது தொடர்பில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் உறுதியளித்தார்.
இதன்போது, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் டி.எம்.செல்வகணபதி, தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மக்கள் தேசம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் விடுதலை கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்பட பல்வேறு அமைப்பினரும், கல்லூரி மாணவ, மாணவிகளும் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net