Subscribe: RSS Twitter
:editor
17/3/2017
தேவையான பொருட்கள்

கடலை மாவு – 1கப்
அரிசி மாவு – 1/4கப்
எள் – 5ஸ்பூன்
சீரகம் – 1/2ஸ்பூன்
கரகரப்பான மிலகு தூள் – 1ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் மாவு வகைகளை போட்டு கையால் பரப்பி கலந்து கொள்ளவும். அதனுடன் எள், சீரகம், தூள் வகைகள், உப்பு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்கு கலக்கவும். பின்பு கொதித்த எண்ணெய் 1ஸ்பூன் விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்..

வாணலியில் எண்ணெய் காயவைத்து நன்கு எண்ணெய் காய்ந்ததும் முறுக்கு அச்சில் கொஞ்ச கொஞ்சமாக பிழியவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும். எண்ணெய்யில் வெடிப்பு சத்தம் அடங்கியவுடன் எடுத்து தனியே வைக்கவும்.ஆறியதும் ஒன்னுஇரண்டாக ஒடித்து காற்று போகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.

சுவையான காரசேவு தயார்!

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net