Subscribe: RSS Twitter
:editor
17/3/2017
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரனை போட்டியிட வைப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக, தமிழக பா.ஜனதா தலைவர் டொக்டர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகை கௌதமி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள், இசை அமைப்பாளர் கங்கை அமரனுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து அவரை ஆர்.கே நகர் தேர்தலில் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நடிகை கௌதமியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வியூகம் ஒன்றை வகுத்து அதனூடாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க. தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net