Subscribe: RSS Twitter
:editor
17/3/2017
உலகின் முன்னணி நிறுவனமான அப்பிள் நிறுவனம், தனது புதிய படைப்புகளை எதிர்வரும் மாதம் 20ஆம் திகதி முதல்  24ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிமுக அழைப்பிதழ்கள் விரைவில் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், குறித்த அறிமுக விழாவில் என்னென்ன அப்பிள் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
முன்னதாக வெளியான தகவல்களின் படி அப்பிள் விழாவில் சிவப்பு நிற ஐபோன் 7, 128 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் எஸ்.இ மற்றும் மூன்று புதிய ஐபேட் ப்ரோ மொடல்கள் – 9.7 இன்ச், 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் திரை கொண்ட மொடல்களுடன் ஐபேட் மினி ஒன்றும் வெளியாகும் என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அப்பிளின் புதிய ஐபேட் அறிமுக விழா மே அல்லது ஜூன் மாதம் நடைபெறலாம் என கூறப்பட்டுள்ளது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net