Subscribe: RSS Twitter
:editor
17/3/2017
இலங்கை வீரர் சண்டிமால் சதமடித்த பின்பு

இலங்கை வீரர் சண்டிமால் சதமடித்த பின்பு……………….

பங்களாதேஷ கிரிக்கட் அணியின் 100வது ரெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்  கொழும்பிலுள்ள பி.சரவணமுத்து விளையாட்டரங்கில் தொடங்கிற்று.
பங்களாதேஷ; கிரிக்கட் அணிரெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தினை 10 நவம்பர் 2000ஆம் ஆண்டு இந்தியாவுடனான கிரிக்கட் விளையாட்டில் ஈடுபட்டு பெற்றுக்கொண்டது.
இந்த அணி மொத்தமாக 16வருடம் 4மாதம் 6 நாட்கள் வரையும் 99 ரெஸ்ட் போட்டிகளில், விளையாடி 76 தோல்விகளையும் ,8 வெற்றிகளையும் மீதி போட்டிகளில் வெற்றி தோல்லி இல்லாமல் சமமாகவும் போட்டிகள் முடித்துக்கொண்டது.
நேற்று முன் தினம் ஆரம்பமான 2வது ரெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
நேற்று காலை வரை துடுப்பெடுத்தாடிய இலங்கை, அணி மொத்தமாக 113.3 ஓவர்களில், 338 ஓட்டங்களைப் பெறறது.
சண்டிமால் அதிகூடிய ஓட்டமாக 138 ஓட்டங்களை பெற்றார். அதை அடுத்து வேகப்பந்து வீச்சாளரான லக்மல் 35 ஓட்டங்களையும், டிக்வெல மற்றும் சில்வா தலா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதையடுத்து நேற்று 2வது நாள் பங்களாதேஷ அணி அதனது முதலாவது இனிங்சை துடுப்பெடுத்தாட தொடங்கியது.
இன்று மாலை வரை துடுப்பெடுத்தாடினார்கள் மொத்தமாக சகல விக்கட்டுகளையும்  134.1 ஓவர்களில் இழந்து,  467ஓட்டங்களை பெற்றனர் இவர்கள் இலங்கை அணியிலும் பார்க்க 129 ஓட்டங்களை மேலதிகமாக பெற்றனர்.
அந்த அணியின் ஆட்டக்காரர் சக்கீப் அல் ஹஷன் அதி கூடுதலாக 116ஓட்டங்களைப் பெற்றார். மேலும் சர்க்கார் 61 ஓட்டங்களும், இக்பால் 42 ஓட்டங்களும், ரகீம் 52 ஓட்டங்களும் ,மொசட்டக் ஹொசன் 75 ஓட்டங்களையும் பெற்றார்
இலங்கை பந்து வீச்சாளர்களில் சுழற்பந்து வீச்சாளர்களான ரங்கன்னா ஹேரத், மற்றும் சண்டக்கார் ஆகிய இருவரும் தலா 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்கள்.
அதைத் தொடர்ந்து இலங்கை அணி  13ஓவர்களில் அதன் 2வது இனிங்சில் விளையாட ஆரம்பித்தது.இலங்கையின் தொடக்க ஆட்ட விரர்களான கருணரத்தினவும் தரங்காவும் ஆடிக்கொண்டிருந்தனர்.
3வது நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி எந்தவித விக்கட் இழப்பும் இன்றி 54 ஓட்டங்களை பெற்றது.
இதன்படி பங்களாதேஷ அணி இன்னும் 75 ஓட்டங்கள் மேலதிகமாக கொண்டு முன்னநியில் நிற்கின்றது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net