Subscribe: RSS Twitter
:editor
18/3/2017

 

ஜனாதிபதித் தேர்தல் 2015

ஜனாதிபதித் தேர்தல் 08 ஜனவரி 2015 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த பொலநறுவைத் தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் அமைச்சராகவும் இருந்த, திரு.மைத்திரிபால சிறிசேன,திரு.மகிந்த ராஜபக்ஷாவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டார்.
ஸ்ரீலங்காவின் 7வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பெலவந்த கமரலாயகே மைத்திரிபால யாப்பா சிறிசேன (Pelwatte Gamaralage Maithripala Yapa Srisena) 03 செப்ரெம்பர் 1959 ஆம் ஆண்டு, மேல் மாகாணத்தில், கம்பகா மாவட்டத்திலுள்ள யாகொடையில் பிறந்தார். இவர் 2வது உலகப் போரில் பங்கேற்ற வீரரான அல்பேட் சிறிசேனவின் மகனாவார். இவரின் தந்தையாருக்கு அந்தக் காலத்தில் பொலநறுவையில் 5 ஏக்கர் வயல் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் திரு.மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தினர் பொலநறுவைக்குச் சென்று குடியேறினார்கள்.
இவரது தாயார் ஒரு ஆசிரியை ஆவார்.ஆரம்பக் கல்வியை தொம்பேவெல மகா வித்தியாலயத்திலும், பொலநறுவை யில் உள்ள றோயல் கல்லூரியிலும் கற்றார்.
பாடசாலை மாணவராக இருந்த காலத்திலேயே, கம்யூனிச கொள்கைகளில் அக்கறை காட்டினார். என்.சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ கட்சியில் (சீனா-பீகிங்) சேர்ந்து கொண்டார்.
அவரது 17 வயதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளை ஞர் அணியில் செயலாளராக பதவி வகித்தார்.மேலும் 19ம் வயதில், ஜனதா விமுக்தி பெரமுனவினால் நடத்தப்பட்ட கிளர்ச்சியில் பங்குபற்றினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 15 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடுதலையானதை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திரு.அநுரா பண்டாரநாயக்காவின் தலைமையிலான,அகில இலங்கை வாலிபர் அமைப்பின் தேசிய மட்ட உறுப்பினராக சேர்ந்து கொண்டார்.
1974 ஆம் ஆண்டில், திரு.மைத்திரிபால சிறிசேன பலுகஸ்ரமன பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கொள்வனவு உத்தியோகத்தராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர், 1976 ஆம் ஆண்டு கிராம சேவகராக பதவி பெற்றார். அந்தப் பதவியை 1978 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார். அதனையடுத்து, 1978 ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரானார். பின்னர் அவர் அகில இலங்கை சுதந்திரக் கட்சியின், வாலிபர் அமைப்பின் தலைவராகவும், அடுத்து தனாதிகாரியாகவும் பதவி வகித்தார்.
1973 ஆம் ஆண்டு மூன்று வருடங்கள் குண்டசாலை யிலுள்ள ஸ்ரீலங்கா விவசாயப் பாடசாலையில் கல்வி கற்றார். 1987 ஆம் ஆண்டு ருஷ்யாவில் உள்ள மார்க்ஸிம் கோர்க்கி; இலக்கிய நிலையத்தில் அரசியல் சம்பந்தமாகப் படித்து டிப்ளோமாப் பட்டம் பெற்றார். 1989 ஆம் ஆண்டு முதன் முதலாக திரு.மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக பொலநறுவைத் தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்;பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

கட்சியின் செயலாளர் நாயகம்

1997 ஆம் ஆண்டு அவர் முதன் முதலாக கட்சியின் செய லாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார். சிறிது காலம் அந்தப் பதவியை வகித்த பின்னர், பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கட்சியின் செயலாளர் நாயகம் பதவிக்கான தேர்தலில் திரு.எஸ்.பி திஸநாயக்கவிடம் தோற்றுப் போனார். இருந்த போதும் திரு. சிறிசேன கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். பின்னர் திரு.எஸ்.பி திஸநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியதை அடுத்து,அக்ரோபார் 2001 ஆம் ஆண்டு கட்சியின் செயலாளர் நாயகமாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
1994 ஆம் ஆண்டு, இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் முன்னணி சார்பாக போட்டியிட்ட திரு.மைத்திரிபால சிறிசேன மீண்டும் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில்; வெற்றி பெற்றதையடுத்து திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவால் அவர் உதவி நீர்ப்பாசன அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1997ஆம் ஆண்டு, ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க இவரை கபினட் அந்தஸ்துள்ள மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமி;த்தார். 2001 ஆம் ஆண்டு, நடைபெற்ற தேர்தலில் திரு.மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். ஆனால் திருமதி சந்திரிக்கா அம்மையாரின் மக்கள் முன்னணி போதிய ஆசனங்களை பெறாததையடுத்து, அரசு அமைக்கும் சந்தர்ப்பத்தை இழந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனதா விமுக்கி பெரமுனவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை ஆரம்பித்தது.

மஹிந்த அரசில் மைத்திரிபால சிறிசேன

ஏப்பிரல் 2004இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற திரு.மைத்திரிபால சிறிசேனாவை, நதிப்படுக்கைகள் அபிவிருத்தி, மற்றும் ராஜரட்டை அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி திருமதி.சந்திரிக்கா நியமித்தார். அது மட்டுமல்லாமல் சபை முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் 2005ல் திரு.சிறிசேன வகித்து வந்த அமைச்சு, நீர்ப்பாசன மற்றும் ராஜரட்டை அபிவிருத்தி அமைச்சு என மாற்றம் செய்யப்பட்டது .
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்;, புதிய ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷா திரு.சிறிசேனவை விவசாயம்,சுற்றுச் சூழல், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக நியமித்தார்.
விவசாய அமைச்சராக இருந்த காலத்தி;ல், திரு.சிறிசேன யுத்தம் நடைபெற்று முடிவுக்கு வந்த கடைசி 2 வாரங்கள் , தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார்.
தன்னைப் புலிகள் ஆகக் குறைந்தது, ஐந்து தடவையாவது கொலை செய்ய முயன்றதாகக் கூறினார். மேலும் 2008 ஒக்ரோபர் 09ல், இவர் ஒரு வாகனத் தொடர் அணியில் சென்று கொண்டிருந்தபோது, புலிகளின் தற்கொலைப் படைப் போராளியினால் தாக்கப்பட்டதாகவும், அதன் போது அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் பொரலஸ்கமுவாவில் உள்ள, பிரிவென சந்தியில் நடைபெற்றது . இதில் ஒருவர் உயிரிழந்தார். ஏழு பேர் காயமடைந்தனர்.
திரு.மைத்திரிபால சிறிசேன, 2010 ஏப்பிரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் சுகாதார அமைச்சராக நியமிக்கப் பட்டார். இந்தக் காலகட்டத்தில் தான் அமைச்சர் திரு.சிறிசேன, சிகெரெட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவற்றிற்கு எதிராக நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டார்.
ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷாவின் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராகவும், கட்சியின் செயலாளர் நாயகமாகவும் இருந்த திரு.மைத்திரிபால சிறிசேன, தனது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, 8 ஜனவரி 2015ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் போட்டி

சுயமாகவே ஒரு சோசலிசவாதி என கூறிக்கொள்ளும் திரு.மைத்திரிபால சிறிசேன ஊழல்கள், அதிகார துஷ்பிர யோகம் ஆகியவற்றிற்கு எதிராக போர் தொடுத்தார். மேலும் 25 வருடங்களாக உள்நாட்டுப் போரில் நடந்தவைகள் பற்றி, சுயாதீனமாக உள்ளுர் விசாரணைகளை செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்;. இவருக்கு எதிராக எந்தவிதமான ஊழல் லஞ்ச, லாவணியங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இல்லாதபடியால், எதிர்க்கட்சியினர் திரு.சிறிசேனவை தங்கள் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினார்கள். செயல்திறன் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கப் போவதாக ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சூளுரைத்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி சார்பில், மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதியாக இருந்த திரு. மகிந்த ராஜபக்ஷாவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், 100 நாட்களுக்குள் ‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை, நீக்குவேன் என வாக்குறுதியளித்தார். டிசம்பர் 01, 2014 இல், தனக்கு ஆதரவளிக்க வந்த அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கை களை தனித் தனியாக செய்து கொண்டார். அரசியல் சட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த 18வது திருத்தை ரத்துச் செய்து, மீண்டும் 17வது திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக பதவியேற்று முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங் கவை பிரதமர் ஆக்குவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், பல அரசியல் சீர்திருத்தங்களை செய்வதாகவும் அறிவித்தர். மேலும் திரு.மைத்திரிபால சிறிசேன, ஜனநாயக் கட்சியின் தலைவரான முன்னாள் இராணுவ தளபதி திரு.சரத் பொன்சேகாவுடனும், ஜனநாயக மக்கள் முன்னணியை சேர்ந்த ஜனாப் அஸாத் சாலியுடனும், தமிழ் தேசியக் கூட்டணியுடனும், தனித்தனியாக உடன்பாடுகள் செய்து கொண்டார்.
அதே நேரத்தில் ஜாதிக ஹெல உறுமய திரு. மைத்திரிபால சிறிசேனவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. திரு.மைத்திரிபால சிறிசேன புதிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம’; சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது. கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் 19 டிசம்பர் 2014 ல் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ( A Compassionate Maithri Governance – A Stable Country) வெளியிட்டார்.
அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றி ,இங்கிலாந்து வெஸ்ற்மினிஸ்ரர்நா( West minister)டாளுமன்ற முறை போன்ற மாற்றத்தை கொண்டு வருவதாகும். மேலும் தற்சமயம் அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறையை மாற்றி தேர்தல் தொகுதி முறைக்கான தேர்தல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நீதித்துறை, பொலிஸ், தேர்தல்;, சட்டமா அதிபர் ஆகியவைகள் சுயேட்சை அதிகாரங்களுடன் இயங்குவதற்கு தேவையான ஆணைக்குழுக்களை அமைப்பது என்றும் அந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது மாத்திரமல்லாமல், யுத்த மீறல்கள் மற்றும், யுத்த காலத்தில் நடந்த குற்றங்கள் சம்பந்தமான சர்வதேச விசார ணைகளுக்கு பதிலாக, உள்ளூர் சுயாதீனமான விசா ரணை முறையை அமுல்ப்படுத்துவது என்றும் தனது விஞ்;ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஜனாதிபதி தேர்தலில், அதாவது மைத்திரிபால சிறிசேன 6,217,162 வாக்குகளை, அதாவது 51 வீத வாக்குகளைப் பெற்றார். இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த திரு.மகிந்த ராஜபக்ஷா 5,768 090 அதாவது 47.58 வீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை இழந்தார்.
திரு.மைத்திரிபால சிறிசேனா 09 ஜனவரி 2015ல்; உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கே.ஸ்ரீபவன் முன்னிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
தேர்தலில் வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு, கட்சியை, வழிநடத்தி வருகின்றார்.
புதிதாக பதவியேற்ற திரு.மைத்திரிபால சிறிசேனா பல ‘அதி ரடி’ மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். முதல் வேலை யாக ஜனாதிபதியாக பதவி வகிப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அளவு கடந்த நிறைவேற்றுத் திறன் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற வரம்பினை மீண்டும் அறிமுகப்படுத்தினார். மேலும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற வரம்பினையும் அறிமுகப்படுத்தினார்.
ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிறிசேனா தனது அதிகாரங் களை தானாகவே முன்வந்து கைவிட்ட ஒரு ஜனாதிபதி யாவார். எனவே இந்த விடயங்கள் சம்பந்தமாக இலங்கை அரசியல் சட்டத்தில்; 19வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த 19வது திருத்தச் சட்டம் வெற்றி பெறுவதற்கு இரண் டில் மூன்று பெரும்பான்மை வாக்குகள தேவை. அதனை நிறைவேற்றுவதற்கு, தனிப்பட்ட முறையில் மிகவும் பிரயாசைகளை மேற்கொண்டார்.
இதேபோல, தேர்தல் வாக்களிப்பு முறைமையை மாற்று வது சம்பந்தமாக இலங்கை அரசியல் சட்டத்தின் 20 ஆம் திருத்த யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net