Subscribe: RSS Twitter
:editor
பங்களாதேச பந்துவீச்சாளர் ரகுமான் தனது பந்து வீச்சால் இலங்கை ஆட்ட வீரர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.

பங்களாதேச பந்துவீச்சாளர் ரகுமான் தனது பந்து வீச்சால் இலங்கை ஆட்ட வீரர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்.

100வது ரெஸ்ட் போட்டியில் பங்களாதேசம் வெற்றி பெறுமா?
4வது நாள் ஆட்டத்தை அவதானிக்கும் பொழுது அவர்கள் வெற்றியை நெருங்குகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.
 நேற்று 3வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அதன் 2வது இனிங்சில்எந்தவித விக்கட் இழப்பும் இன்றி 54 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இன்று 4வது நாள் ஆட்டம் ஆரம்பமாகிற்று .
இலங்கைஅணி அதன் 2வது இனிங்சில் 57 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தரங்கவை 26 ஓட்டங்களுக்கு இழந்தது.
அதை அடுத்து ஜோடி சேர்ந்த மென்டிசும் கருணரட்னவும் நிதானமாக ஆடினார்கள்.
மென்டிஸ் அணியின் எண்ணிக்கை 143ஆக இருக்கும்போது 36ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதை அடுத்து வந்த, சண்டிமால்,குணவர்தன,  டிக்வெல, ஹேரத் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
4வது நாள் ஆட்ட இறுதியில் இலங்கை 8விக்கட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இலங்கை 139 ஓட்டங்களால்முன்நிலையில் உள்ளது.
டில் ருவான் பெரேரா 26ஓட்டங்களுடனும், லக்மால் 16ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நாளை 5வது நாள் இலங்கை தொடர்ந்து துடுப்பெடுத்தாடும்.
நாளை பங்காளதேசம் வெற்றிக்கனியை பறிக்குமா?
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net