Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
அமைச்சரவையில் மாற்றம் செய்வதனை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் செய்பய்படாது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் சிலரின் துறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்தால் அது அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆளும் கட்சியின் சில ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்தால், அவர்களின் பிரச்சாரம் உண்மை என நிரூபிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாது அவர்களின் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்வதன் மூலம் குறித்த அமைச்சர்கள் மக்கள் மத்தியில் நெருக்கடி நிலையை எதிர்நோக்க நேரிடம் என தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net