Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
டிமுட்டு கருணரட்ன 100 ஓட்டங்களை பெற்றபோது............

டிமுட்டு கருணரட்ன 100 ஓட்டங்களை பெற்றபோது…………

இலங்கை 319 ஓட்டங்களில் அதன் 2வது இனிங்சை முடித்துக்கொண்டது.
இலங்கை பங்களாதேசத்திற்கான 2வது ரெஸ்டின் 5வது நாள் ஆட்டம் இன்று காலை சரவணமுத்து கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமானது.
நேற்று 4வது நாள் ஆட்ட இறுதியில் இலங்கை 8 விக்கட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை பெற்று, 139 ஓட்டங்கள் முன்நிலையில் இருந்தது.
இன்று காலை விளையாட்டு ஆரம்பித்த பொழுது டில்ருவானும், லக்மலும் தொடர்ந்து ஆடினார்கள்.
இருவரும் ஜோடி சேர்ந்து மொத்தம் 78 ஓட்டங்களை பெற்றனர்.
டில் ருவான் 174 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்த பொழுது ஆட்டமிழந்தார்.
அதையடுத்து 10வது ஆட்டக்காரரான சண்டக்கார் களமிறங்கினார்.
லக்மல் 42 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஹொசைன் வீசிய பந்தை ஓங்கி அடித்த பொழுது ஹசானால் பந்து பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.
இன்று காலை இலங்கை அணி மொத்தமாக 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
பங்களாதேச பந்துவீச்சாளர்களான அல் ஹசன் 4விக்கட்டுகளையும், ரகுமான் 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
2வது இனிங்ஸ் ஆட்ட முடிவில் இலங்கை 190ஓட்டங்கள் முன்நிலையில் உள்ளது .
பங்களாதேசம் இலங்கை அணியை வெல்லவேண்டுமாயின் 5வது நாள் ஆட்ட முடிவுக்கிடையில் 191 ஓட்டங்களை பெறவேண்டும்.
முடியுமா……..?
நடக்குமா……?
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net