Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
பாதுகாப்பிற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட கமெராக்கள் தற்போது மற்றவர்களின் அந்தரங்கங்களையும் படம் பிடித்து இணையங்களில் பதிவேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஹோட்டல் அறைகளிலும், பெரிய பெரிய அங்காடிகளின் டிரஸ்ஸிங் ரூம்களிலும் கமெராக்கள் வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்படுகிறது.
கமெராக்களை உபயோகித்து வீடியோ எடுப்பது எல்லாம் சாதாரணமாகிவிட்ட நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வைபை(WiFi) கேமரா.
பார்ப்பதற்கு பல்பு வடிவில் இருக்கும் இந்த கமெராவானது வைபை வசதியுடையது. இதனை வைபை சாதனமாகவும் பயன்படுத்த இயலும்.
ஹோட்டல் ரூம்களிலோ அல்லது டிரசிங் ரூமிலோ இதனை பொருத்திவிட்டால் பார்ப்பதற்கு வைபை சாதனம் போன்றுதான் தெரியும். இதில் உள்ள கேமராவினை கண்டறிய இயலாது.
இதில் உள்ள கேமரா மற்றும் வைபையானது ஒரே நேரத்தில் வேலை செய்யக்கூடியது. இதனால் மொபைல் போனில் கூட வீடியோவினை பார்க்க இயலும். இந்த கேமராவானது 360 டிகிரி கோணத்தில் சுழன்று வேலை செய்யும்.
பார்ப்பதற்கு பல்பு போன்று இருக்கும் இந்த சாதனம் வைபை வசதியுடன் அந்த அறையினை தன் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்.
960P HD தரத்தில் வீடியோ எடுப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட கமெரா இருட்டிலும் 16அடி தூரம் வரை நடப்பவற்றை துல்லியமாக பதியும் வசதியுடையது.
வீடியோக்களை பதிந்து கொள்ளவதற்காக அதனுள்ளே 128ஜிபி அளவிலான மெமரி கார்டு ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும். வீடியோ மட்டுமல்லாது ஓடியோவினையும் துல்லியமாக பதிவு செய்யும் வசதியுடையது.
வீட்டின் பாதுகாப்பிற்காக என விற்பனைக்கு வந்துள்ள இந்த கமெரா தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம்.
நீங்கள் செல்லும் ஹோட்டல் அறையிலோ அல்லது டிரசிங் ரூம்களிலோ கமெரா இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே உங்கள் மொபைல் போனில் இருந்து கஸ்டமர் கேர்க்கு கால் செய்யவேண்டும்.
எதிர்முனையிலோ அல்லது உங்களுக்கு ஏதாவது வித்தியாசமான சத்தம் கேட்டாலோ அல்லது கால் கட் ஆனாலோ அங்கு கமெரா இருப்பது உறுதி.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net