Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
மென்மையாக இருப்பதும் நேர்மறையாக சிந்திப்பதும் பெண்களுக்கு உள்ள பலவீனம் என்று நினைக்க வேண்டாம். அது அவர்களது பலம் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு பெண்ணை, பெண் தானே என்று இளக்காரமாக பார்க்கும் நிலைமை உள்ளது. தைரியம், அறிவு, முன்னேற்றம் என எதிலும் பெண்கள் யாரும் ஆண்களுக்கு சளைத்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை.
மென்மையாக இருப்பதும் நேர்மறையாக சிந்திப்பதும் பெண்களுக்கு உள்ள பலவீனம் என்று நினைக்க வேண்டாம். அது அவர்களது பலம். பார்ப்பதற்கு பெண்கள் கடலலையை போன்றவர்கள். சுழன்று மூழ்கடிக்கும் பேரலையாக மாறுவதற்கு நீண்ட நேரம் எடுக்காது.
எதிர்ப்புகளையும், எதிர்மறை விளைவுகளையும் சந்திக்கும் போதுதான் பெண்களின் பலம் உலகுக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. இப்படியான நிறைய அனுபவங்கள் என் வாழ்வில் நிகழ்ந்துள்ளன” என கூறியுள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net