Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
உலக நாடுகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்ற வட.கொரியா, புதிதாக உயர் உந்து சக்தி கொண்ட இயந்திர பொறியை பரிசோதித்துள்ளது.
வட கொரியாவின் டொன்ங்சான்ஞ்-ரி ராக்கெட் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட்ட குறித்த உயர் உந்து சக்தி கொண்ட இயந்திர பொறி சோதனை வெற்றியடைந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியா, சர்வதேச தரத்தில் செயற்கைக்கோள்கைளை செலுத்தும் முயற்சியை அடைய இந்த இயந்திர பொறி உதவியாக இருக்கும் என, வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நீண்ட தூர அணு ஏவுகணையை உருவாக்கும் வட கொரியாவின் இலக்கிற்கு இது ஆரம்ப கட்ட சோதனையாக இருக்குமென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வடகொரியாவின் தொடர் ஆயுத சோதனையினால் தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடித்து வருவதாக கூறப்படுகின்றது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net