Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து, பேசும் நாள் விரைவில் வரும் என்று அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூரில் தி.மு.க. சார்பில் கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையேலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ நான் கலைஞரோடு 55 ஆண்டு காலம் வாழ்ந்தவன். கலைஞர் தன் வாழ்நாள் முழுவதும் இந்த இனத்துக்காகவும், இயக்கத்துக்காகவும் பாடுபட்டவர்.
அந்த மாபெரும் தலைவனுக்கு உடல்நலம் தளர்ந்திருக்கிறது. மிகவிரைவில் கலைஞர் பேசுவார். அவரின் ஒரே வரியான ‘என் உடன் பிறப்புகளே’ என்று அவர் சொல்லுவார்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net