Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான பிரம்மாண்டமான படம் – பாகுபலி.
ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, “Baahubali 2 – The Conclusion” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், பாகுபலி 2 படத்தின் டிரெய்லர் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வெளியாகவுள்ளதையடுத்து, கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net