Subscribe: RSS Twitter
:editor
19/3/2017
5வது நாள்ஆட்ட முடிவில்

5வது நாள்ஆட்ட முடிவில்…………

பங்காளதேசம் இலங்கை அணியுடன் அதன் 100வது ரெஸ்டினை இன்று விளையாடி,  4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இன்று காலை 5வது நாள் விளையாட்டின் போது,  இலங்கை அணி 319 ஓட்டங்களைப் பெற்று அதன் 2வது இனிங்சை முடித்துக் கொண்டது.
இலங்கையின் இரண்டாவது இனிங்ஸ் முடிவில் 191 என்ற வெற்றி  இலக்கை பங்களாதேசத்திற்று விடுத்தது.
அதை அடுத்து, துடுப்பெடுத்தாடிய பங்களாதேச அணி 57.5 ஓவர்களில்,  6விக்கட் இழப்பிற்கு 191 ஓட்டங்களைப் பெற்றது .
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இக்பால் 82 ஓட்டங்களையும், ரகுமான் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் பநது வீசிய பெரேரா மற்றும் ஹெரத் ஆகிய இருவரும் தலா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினர்.
தேநீர் இடைவேளைக்கு முன்னர், பங்களாதேசத்தின் வெற்றியுடன் ஆட்டம் முடிவிற்கு வந்தது.
பங்களாதேசம் விளையாடிய 100 ரெஸ்ட் போட்டிகளில் இது அந்த அணி பெற்ற 8வது ரெஸ்ட்  வெற்றியாகும்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net