Subscribe: RSS Twitter
:editor
20/3/2017

வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அதிகாலையிலேயே  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்பகுதியில் குறித்த  மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உரிமையாளர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை வேளையில்  வீட்டு வளவுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரியூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள் பெற்றோல் ராங் வெடித்த சத்தம் கேட்டு எழுந்த வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அயலவர்கள் தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை. இச்சம்பவத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
மேலும் இது தொடர்பில் ஓமந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net