Subscribe: RSS Twitter
:editor
20/3/2017

நாடு முழுவதும் கூட்டு எதிர்க்கட்சி ஆரம்பித்துள்ள எதிர்ப்புக் கூட்டங்கள் அரசாங்கத்துக்கு பாரிய தலையிடியாக அமைந்துள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள இந்த எதிர்ப்புக் கூட்டத் தொடர் நாடுமுழுவதும் பரவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“இக் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒன்றுதிரண்டு வருகின்றனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் அதிருப்தியடைந்துள்ள மக்கள், அரசாங்கத்தை விட்டும் தூரமாக ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் மக்களுக்காக எந்தவொரு நல்ல விடயங்களையும் செய்யவில்லை.
இக் கூட்டங்களின் மூலம், அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் ஒன்றை புகட்டவுள்ளோம்” எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net