Subscribe: RSS Twitter
:editor
20/3/2017

நாடாளுமன்றம் கலைத்தலும் தேர்தலும்

நாடாளுமன்றம் 26 யூன் 2015ம் திகதி கலைக்கப்பட்டு, 17 ஆகஸ்ட் 2015ஆம் திகதி புதிய நாடாளு மன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என்று விஷேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக் கான ஐக்கிய தேசிய முன்னணி மொத்தமாக 106 ஆசனங் களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் இயங்கும் கூட்டணி, 95 ஆசனங்களையும் பெற்றது. திரு.இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன.
தேர்தல் முடிவின்படி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன் னணி 225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறுவதற்கும் தனியாக ஆட்சி அமைப்பதற்கும் மேலும் ஆறு ஆசனங்கள் தேவைப்பட்டது.

தேசிய அரசாங்கம் அமைத்தல்

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு 20 ஆகஸ்ட் 2015ல் கூடி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைப்பது என்று தீர்மானித்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க 21 ஆகஸ்ட் 2015 ஆம் திகதி பிரதம மந்திரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அவ் வாறு அவர் சத்தியப்பிரமாணம் செய்ததையடுத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் திரு. துமிந்த டிசநாயக்காவும், ஐக்கிய தேசியக் கட்சியின் செய லாளர் நாயகம் ஜனாப்.கபீர் ஹாஸீமும்; தேசிய அரசாங்கம் அமைப்பது சம்பந்தமாக ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன் பிரகாரம், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 33 கபினட் அந்தஸ்து உள்ள அமைச்சர்களும், 11 இராஜாங்க அமைச்சர்களும், 13 உதவி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
அதே போலவே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் 13 கபினட் அந்தஸ்து உள்ள அமைச்சர்களும், 08 இராஜாங்க அமைச்சர்களும், 13 உதவி அமைச்சர்களும், மைத்திரி – ரணில் தேசிய அரசாங்கத்தில் நியமிக்கப்பட்டார்கள்.

தேசிய அரசாங்கம்

பொதுத் தேர்தலுக்கு பின்னர் மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்கா அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்று பல முக்கியமான தீர்மானங்களை எடுத்தார்கள். இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிக்கா குமாரதுங்காவிடம் இந்தப் பொறுப்பு விடப்பட்டுள்ளது.
மேலும், யாழ் மாவட்டத்தில், குறிப்பாக வலிகாமப் பகுதியில் 32இற்க்கு மேற்பட்ட இடைத்தங்கல் முகாம்களில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஆயிரத்திற்கு மேற்பட்ட இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ஸ்திரமான குடியிருப்புக்களும், உயர் பாதுகாப்பு வலயத்திற்கென்று ஒதுக்கப்பட்ட ஆறாயிரத்து ஐந்நூறு ஏக்கர் நிலத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை பாதுகாப்பு படையினரிடம் இருந்து மீளப்பெற்று உரிமையாளர்களுக்கு வழங்கும் வேலைகளையும், வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதையும் ஜனாதிபதி திரு.மைத்திரிபால சிறிசேனா மேற்கொண்டு வருகின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர்; இரா.சம்பந்தனுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் வழங்கப்பட்டது.
1977ம் ஆண்டு யூலையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை அடுத்து, அன்று திரு.அப்பாப்பிள்ளை அமிர்த லிங்கத்தை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தார்கள்.
அதன் பின்னர், இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு தமிழரான திரு. இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

தமிழ் தேசியமும் தமிழர் ஒத்துழையாமையும்

இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம், தமிழ் அரசியல் தலைவர்கள், எதிர்ப்பு அரசியலை மாத்திரமே செய்து வந்தார்கள். 1970ற்க்கு முன்னர் ஒத்துழையாமை இயக்கம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
1961ம் ஆண்டளவில், தமிழரசுக் கட்சி பெரிய ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டது. யாழ்ப்பாணக் கச்சேரி வாசலுக்கு முன்னால், நூற்றுக்கணக்கானோர் அமர்ந்திருந்து அரசாங்கம் செயற்படாமல் இருப்பதற்காக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார்கள்.

1961 ஆம் ஆண்டுசத்தியாக் கிரஹம்

இந்த சத்தியாக்கிரகம், 20 பிப்பிரவரி 1961ம் ஆண்டு ஆரம்பமாகிற்று. அவ்வாறு ஆரம்பமான சத்தியாக்கிரகம் 18 ஏப்பிரல் 1961ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள எந்தத் தலைவர்களுமே, அந்தச் சத்தியாக்கிரகத்தில் பங்குபற்ற வில்லை. ஆனால் அன்று நான் மாணவர்கள் அணித் தலைவர்களில் ஒருவராக இருந்தேன். இவர்கள் எல்லோரும், திரு.இரா.சம்பந்தன் உட்பட, பெரும்பாலானோர் 1977 யூலை மாதத்திற்கு பின்னர் அரசியலிற்குள் நுழைந்தவர்கள் ஆவார்.
அதே போல, திரு. மாவை சேனாதிராசாவைப் பொறுத் தளவில், திரு.அமிர்தலிங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந் தவர். காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிடு வதற்கு, மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு.எஸ்.சேனாதிராசா பின்னர் தேவைப்படுவார் என்று தன்னுடன் கூடவே திரு.அமிர்தலிங்கம் வைத்திருந்தார். ஆனால் அவர், கூட, வைத்திருந்த திரு.அமிர்தலிங்கத்திற்கு, குழி பறித்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து, திரு.அமிர்தலிங்கத்தின் முடிவிற்கு வழி சமைத்தார். பின்னர் திரு.அமிர்தலிங்கத்தின் இறப்பினால், அவரினால் ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு, கட்சியின் நியமன உறுப்பினராக முதன் முதலாக திரு. மாவை சேனாதிராசா நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சி

தந்தை திரு.செல்வநாயகம், திரு.அமிர்தலிங்கம் ஆகிய வர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி இனித் தேவையில்லை என்று முடிவு செய்து, 1984 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வட்டுக் கோட்டை தீர்மானத்திற்கு பின் னர் , தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை அரசியல் கட்சியாக பிரகடனம் செய்ததன் பின், இலங்கைத் தமிழரசுக் கட்சியை அவர்கள் முடக்கி வைத்தார்கள்.
அவ்வாறு முடக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த ஆவரங்கால் திரு. சின்னத்துரையை அச்சுறுத்தி, அவரிடம் கடிதம் பெற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியியை மீண்டும் புதுப்பித்தனர். முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த திரு.தமிழ்ச்செல்வன் உதவியுடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளராக திரு. மாவை சேனாதிராசாவும், தலைவராக திரு.இரா.சம்பந்தனும்
தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகிற்று. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டனர்.
2009ம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திரு.சம்பந்தன், திரு.மாவை சேனாதிராசா ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழரசுக் கட்சியில், 2004ம் ஆண்டு தேர்தலில், வெற்றி பெற்ற பல தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இருந்தார் கள்.அந்த ஆதரவாளர்களுக்கு, தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டு, பல புதியவர்களுக்கு போட்டியிடும் சந்தர்ப்பத்தை வழங்கினார் திரு சம்பந்தன்.
முன்னாள் போராளிகள் பலர் இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களாக தமிழ்த் தேசி யக்கூட்டணி சார்பில் போட்டியிட்டனர்.
இன்று தமிழ் தேசியக் கூட்டணியில் நாடாளுமன்ற உறுப் பினர்களாக இருக்கும் எவருமே, உண்மையான தமிழ ரசுக் கட்சியினரே அல்ல. இடைச்செருகல்கள். ‘பச்சை மண்ணும், சுட்ட மண்ணும் ஒரு போதும் ஒட்டாது.’ இது திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் வாக்கு. இந்த வாக்கு திரு.சம்பந்தன் போன்றோருக்கு நன்கு பொருந்தும்.

தமிழ்த் தேசியமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும்

தமிழ்த்தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்து நின்று கொண்டு, நீண்ட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினராகவும், தேசிய உணர்வினை வளர்ப்பதற்காக தமது வாழ்நாட்களை அர்ப்பணித்த தமிழர்களை, இவர்கள் ‘துரோகிகள்,’ என்று நாக் கூசாமல் அழைக்கின்றனர். ஆனால் தாங்கள் எப்படி அரசியலில் தூயவர்கள் என்ற அவர்களின் நிலைப்பாட்டை வெளியிட அவர்கள் தவறிவிட்டார்கள். ஆனால் 1952 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த நாள் தொடக்கம் இன்று வரை இக் கட்சியின் தலைவர்களால் இதுவரை எதையுமே சாதிக்க முடியவில்லை.
மேலும், 2010ம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சி, அந்தக் கட்சியின் உறுப்பினர்களைப் பற்றி அக்கறை காட்டாது இருந்து விட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசியல் புறோக்கர்களும்

முன்னாள் ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷாவின் தலை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வட மாகாணத்தி லுள்ள யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் திரு.டக்ளஸ் தேவானந்தா வையும், வன்னித் தேர்தல் மாவட்டத்திற்கு ஜனாப் றிஷாத் பதியூதீனையும் பொறுப்பாளர்களாக நியமித்து, தேர்தல் வேலைகளையும், கட்சி வேலைகளையும், மற்றும் தமிழ் மக்களுடனான தொடர்பாடல்களையும் அவர்கள் இருவருமே மேற்கொண்டனர்.
இந்த இரண்டு அரசியல் தலைவர்களுமே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் மக்களுக்கான தொடர்பாளர் களாக இயங்கினர். அந்த ஏற்பாட்டின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழ் மக்களோடு எந்தவிதமான நேரடித் தொடர்புகளையும் ஏற்படுத்தாமல் கைவிட்டது. அது மாத்திரமல்லாமல், நீண்ட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக இருந்த தமிழர்களையும் கைவிட்டது. அவர்கள் நீண்டகாலமாக வடமாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தவர்கள் பலர் இன்று அரசியல் அநாதைகளாக உள்ளார்கள். இந்த நிலையில் மாற்றம் அவசியம்.
முன்னாள் ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷவின் தலை மையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ் மக்கள் தொடர்பாளர்களாக இருந்த திரு.டக்ளஸ் தேவானந்தாவும், ஜனாப் றிசாத் பதியூதீனும், 2015இல் நடைபெற்ற நாடளு மன்றத்திற்கான பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் இயங்கும் கூட்டணியை
‘தொப்படீர,;’ என நட்டாற்றில் கைவிட்டு, ஒருவர் தனது சொந்தக் கட்சியிலும், மற்றவர் ஐக்கிய தேசியக் கட்சியிலும் போட்டியிட்டனர். இந்த அரசியல் தலைவர்கள் 2005 தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை, முன்னாள் ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷாவின் அரசாங்கம் வழங்கிய சலுகைகள் யாவற்றையும் பெற்று அனுபவித்து விட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நட்டாற்றில் கைவிட்டு விட்டார்கள்.
இவர்கள், வடபகுதியில் முன்னாள் ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ஷாவின் காலத்தில் தமிழ் மக்களின் இணைப்பாளராக இருந்தார்கள். அந்தக் காலத்தில் தமிழ் மக்களை வளர விடாது தடையாக இருந்தார்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. மற்றும் தமிழ் மக்கள் அரசாங் கத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் தடையாக இருந்தார்கள் எனவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர், வடமாகாணத் தில் நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப் பினர்கள் ‘அரசியல் அநாதைகளாகத்தான்’ உள்ளார்கள். சமீப காலமாகத்தான் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஓர ளவு ஏற்பட்டு வருகின்றது. இங்கே ‘அரசியல் அநாதைகள’; என்று சமீபத்தில் ஆங்கிலத்தில் நான் ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையின் நகலை வேலணைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி திருமதி.சந்திரிக்கா பண்டாரநாயக்கவிடம் வழங்கினேன். அவ்வாறு நான் எழுதிய அந்தக் கட்டுரையினை இந்த நூலின் முடிவுரையாக இங்கே தருகின்றேன்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net