Subscribe: RSS Twitter
:editor
27/3/2017
2016ஆம் ஆண்டு டிசெம் பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறு கள் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம் தங் களது பெறுபேறுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, 5,669 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம் திகதி முடி வடையவுள்ளது.
இவ்வாண்டின் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை, ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 02ஆம் திகதி முடிவடையும். இதேவேளை, இவ்வாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net