Subscribe: RSS Twitter
:editor
29/3/2017
இஸ்லாமிய நபர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை 4 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இஸ்லாம் மதத்தை சேர்ந்த பசித், இந்து மதத்தை சேர்ந்த அங்கிதா ஆகிய இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள், இருவரின் குணநலன்களும் ஒருவருக்கொருவர் பிடித்துவிட்டதால் திருமண பந்தத்தில் இணைய ஆசைப்பட்டுள்ளனர்.
ஆனால், வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு ஆரம்பத்தில் பெற்றோர்கள் எதிப்பு தெரிவித்தனர்.
ஏனெனில் தலாக் கூறி வேறொரு பெண்ணை மணந்துவிட்டால், தங்களின் மகளின் எதிர்காலம் என்னாகும்? என்ற அச்சத்தில் திருமணம் செய்து வைக்க தயங்கியுள்ளனர்.
ஆனால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்துள்ளனர். இந்த இடைப்பட்ட நாட்களில் பசித், அங்கிதா குடும்பத்தினருடன் நெருங்கி பழகியதில், பசித்தை அங்கிதாவின் பெற்றோருக்கு மிகவும் பிடித்துப்போயுள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், அங்கிதாவின் பெற்றோர் சந்தேகத்தை தீர்த்துவைக்கும் பொருட்டு, அங்கிதாவை 4 முறை திருமணம் செய்துகொண்டார்.
அதன்படி, தலாக் என்பது தனக்கு கிடையாது என்பதை உணர்த்தியுள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net