Subscribe: RSS Twitter
:editor
30/3/2017
இலங்கையில் 8 இலட்சம் பேருக்கு மனநோய் இருப்பதாகவும், இந்த நோயை கட்டுப்படுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.
சுகாதார சேவைகள் இயக்குனர் J.M.W. ஜெயசுந்தர பண்டார குறித்த கருத்தரங்கை நடத்தியிருந்தார்.
இலங்கையில் மனநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆரம்பத்திலேயே இதற்கான உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதிக வேலை, குடும்ப சூழ்நிலை, யுத்தத்தின் பாதிப்பு, கல்விச்சுமை போன்ற பல காரணங்களால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு மனநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இவற்றிலிருந்து மக்கள் தம்மையும், தம்மைச்சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பது அவசியம் என்று இதன்போது வழியுறுத்தப்பட்டுள்ளது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net