Subscribe: RSS Twitter
:editor
1/4/2017
மென்டிஸ் 54 ஓட்டங்களை பெற்றுள்ளார்!

மென்டிஸ் 54 ஓட்டங்களை பெற்றுள்ளார்!

இலங்கைக்கும், பங்களாதேசத்திற்கும் இடையிலான 3 வதும், இறுதியுமான 50 ஓவர் ஒரு நாள் போட்டியில் இலங்கை அபாரமாக விளையாடி 9 விக்கட்  இழப்பிற்கு  280 ஓட்டங்களைப் பெற்றது.
கொழும்பிலுள்ள சிங்களகிரிக்கட்  விளையாட்டு மைதானத்தில் இந்த ஆட்டம் ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் பங்களாதேசம் வெற்றி பெற்று இலங்கையை துடுப்பெடுத்தாட பணித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குணதிலகவும், உப்புள் தரங்கவும் களத்தில் இறங்கினர்.
10வது ஓவர் முடிவதற்கு முன்  76  ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்த போது, குணதிலக 34 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
13வது ஓவரில் உப்புள் தரங்க 35  ஓட்டங்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார்.
அதையடுத்து வந்த மென்டிஸ் 54 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் ஆட்டக்காரர்களான பெரேரா 52 ஓட்டங்களையும், அசேல குலவர்த்தன 34 ஓட்டங்ளையும் பெற்றனர்.
இலங்கை அணி பங்களாதேசத்திற்கு வெற்றி இலக்காக 281  ஓட்டங்களை வைத்துள்ளது.
இந்த செய்தி வெளியாகும் நேரம் பங்களாதேசம் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
5 ஓவர்களில் பங்களாதேச 3நட்சத்திர ஆட்டக்காரர்கள் களப்பலியாகியுள்ளனர்.
-தினச்செய்தி-

 

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net