Subscribe: RSS Twitter
:editor
2/4/2017

 

 

சுரங்க லக்மல்!

சுரங்க லக்மல்!

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 70 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.
3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று(சனிக்கிழமை) கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்றது இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு  9 விக்கெட் இழப்புக்கு 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் மெண்டிஸ் 54 பெரேரா 52 தரங்க 35 குணதிலக மற்றும் குணரத்ன 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் சார்பாக மொட்ராச 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
281 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதல் இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த பங்களாதேஷ் அணிக்கு சகிப் அல்ஹசன் 54 ஓட்டங்களையும் மெகிடி ஹசன் 51 ஓட்டங்களையும் சௌமியா சர்கர் 38 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணிக்கு சற்று சவால் கொடுத்தனர்.
எனினும் மற்றைய வீரர்கள் சொதப்ப பங்களாதேஷ் 210 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர 4 விக்கெட்டுக்களையும் லக்மல் டில்ருவன் பெரேரா பிரசன்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக திஸர பெரேரா வும் தொடர் நாயகனாக குசல் மெண்டிஸ் உம் தெரிவுசெய்யப்பட்டனர்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net