Subscribe: RSS Twitter
:editor
2/4/2017
ஐக்கிய தேசியக் கட்சியில் மூன்று துணை தலைவர் பதவிகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் இந்த அடுத்த வாரம் நடக்கும் கட்சியின் பதவிகள் தொடர்பான திருத்தங்களின் போது புதிய துணை தலைவர் பதவிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர்களாக சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் உதவி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net