Subscribe: RSS Twitter
:editor
3/4/2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்குமாறு கோரி முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எனினும், விமல் வீரவன்ச சுகயீனமுற்று இருப்பதால் அவரால் இன்றைய தினம்  நீதிமன்றத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்படலாம் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டளஸ் அழகப்பெரும நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
வாகன முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விமல், தமக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தார். பின்னர் பௌத்த மதகுருமாரின் வேண்டுகோளுக்கு இணங்க உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net