Subscribe: RSS Twitter
:editor
3/4/2017
தொலைந்த பொருட்களை கண்டுபிடிக்க 17 கிராம்கள் மட்டுமே எடையுள்ள ioTracker எனும் ஜி.பி.எஸ் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த சாதனத்தினை பொருட்களுடன் இணைத்துவிட்டால், அப்பொருட்கள் இருக்கும் இடத்தினை மொபைல் சாதனத்தின் ஊடாக கண்காணித்துக்கொண்டிருக்க முடியும். இதனை இணையத்தளம் ஊடாகவும், ஐபோன்கள் மற்றும் அன்ரோயிட் சாதனங்களின் உதவியுடனும் பயன்படுத்த முடியும்.
இதில் அலாரம் வசதி தரப்பட்டுள்ளதுடன், மின்னஞ்சல் ஊடாக எச்சரிக்கை செய்திகளை அனுப்பும் வசதியும் காணப்படுகின்றது. அத்தோடு 2 வருடங்களுக்கு மேலான பாவனைக் காலத்தினைக் கொண்ட மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும் இச்சாதனத்தின் விலை 89 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net