Subscribe: RSS Twitter
:editor
3/4/2017
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மற்றும் அரசு பணியாளர்கள் வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினந்தோறும் சபைக்குச் செல்ல வேண்டும், அவர்கள் மக்களின் நலனுக்காக முழு நேரமும் செயற்பட வேண்டும், மத்திய அரசமைப்பில் அவர்கள் முக்கிய பங்கினை கொண்டுள்ளார்கள். எனவே, அவர்கள் ஏனைய பணிகளில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
குறித்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திராசூட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  மனுதாரரின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net