Subscribe: RSS Twitter
:editor
5/4/2017
குஷல் பெரேரா 50 ஓட்டங்கள் பெற்ற போது!

குஷல் பெரேரா 50 ஓட்டங்கள் பெற்ற போது!

பங்களாதேசத்திற்கும் இலங்கைக்கும் இடையே நேற்று நடைபெற்ற சர்வதேச T20 கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி அபாரமாக விளையாடி 6விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று மாலை 7மணியளவில் கொழும்பிலுள்ள ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில், பங்களாதேசத்திற்கு எதிரான T20 கிரிக்கட் ஆட்டம் நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேச அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கையின் சார்பில் முதல் ஓவர் பந்து வீச்சை , இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர் லசித் மலிங்கா போட முன்வந்தார்.
லசித் மலிங்கவின் முதல் ஓவர் பந்து வீச்சை பங்களாதேசத்தின் ஆரம்ப ஆட்டக்காரர் டமின் இக்கால் முகம் கொடுத்தார்.
லசித் மலிங்கவின் 2வது வேகப்பந்து வீச்சில் டமின் இக்பால் எந்தவித ஓட்டமும் எடுக்காமல் விக்கட்டை இழந்தார்.
20 ஓவர் முடிவில் பங்களாதேசம் 6விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்க 2விக்கட்டுகளையும் சஞ்ஜெயா, குணரட்ண, பிரசன்ன ஆகியோர் தலா ஒரு விக்கட்களையும் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 156 ஓட்டங்கள் என்ற இலக்கை பங்களாதேசம் இலங்கைக்கு நிர்ணயித்தது.
இலங்கை அணித்தலைவர் உப்புள் தரங்கவும், குஷல் பெரேராவும் ஆரம்ப ஆட்டக் காரராக களமிறங்கினர்.
தரங்க இலங்கை 65ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். குஷல் பெரேரா திறமாக துடுப்பெடுத்தாடி 53பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி 4விக்கட் இழப்பிற்கு 18.5 ஓவர்களில் 158 ஓட்டங்களைப் பெற்று 6விக்கட் வித்தியாசத்தில் பங்களாதேசத்தை வென்றது.
ஆட்ட நாயகணாக குஷல் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.
சர்வதேச T20 கிரிக்கட் வரிசையின் பந்து வீச்சில் நேற்று எடுத்த 2விக்கட்களுடன் சேர்த்து மலிங்க 86 விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.
அதேநேரம் பாக்கிஸ்தானைச் சேர்ந்த ஷகிப் அபிரிடி 97 விக்கட்களை பெற்று முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை   2வதும் இறுதியுமான சர்வதேச  T20 ஆட்டம் நாளை வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பிரேமதாச அரங்கில்  நடைபெறவுள்ளது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net