Subscribe: RSS Twitter
:editor1
5/4/2017
எம்.ஜி.ஆர் அம்மா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாட்டு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தேர்தல் பிரசாரத்தை இத்துடன் நிறுத்திக்கொள். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று இனம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.
கடந்த 2ஆம் திகதி மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய குறித்த மர்ம நபர், ஜெ.தீபா மீது தாகாத வார்த்தைப் பிரயோகத்திலும் ஈடுபட்டார்.
தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த குறித்த நபர் பல அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்புடைய முகமது என தெரியவந்துள்ள நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net