Subscribe: RSS Twitter
:editor
5/4/2017
மட்டக்களப்பில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற குற்றச்சாட்டில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கொஸ்கொல்ல காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட நிலையிலேயே நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரி நளின் வீரரத்ன தெரிவித்தார்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து பூஜைப் பொருட்கள், வான், திறப்புகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது
மேலும் இதன்போது கண்டி, மஹியங்கனை, மினிப்பே, பண்டாரவளை, செங்கலடி, கோப்பாவெளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் கரடியனாறுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டும் நடவடிக்கைகளுக்காக பூஜை மந்திரம் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாக கிராமவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்களை கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net