Subscribe: RSS Twitter
:editor
6/4/2017

தமிழ் மக்களின் விடுதலைப் புலிகளின் தலைவரும் முன்னாள் கிழக்குமாகாண சபை முதல்வரும் ‘பிள்ளையான்’ என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் மற்றும் அவரது சகாக்கள் நால்வருக்கும் மீண்டும் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை சம்மந்தமாக சந்தேகத்தின் பேரில் பிள்ளையானுக்கும் அவரது சகாக்களான எட்விட் சில்வா, குருசானந்தராஜா, கே.கணகநாயகம், மற்றும் இராணுவ புலனாய்வை சேர்ந்த உத்தியோகத்தர் எம்.கலீல் ஆகியோருக்கும் பிணைவழங்க மட்டக்களப்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மறுத்துவிட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பிலுள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்மஸ் திருப்பள்ளி பூஜையில் 25 டிசம்பர் 2005ம் ஆண்டு பங்குபற்றிக்கொண்டிருக்கும் போது, சுட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்தக் கொலை சம்மந்தமாக பிள்ளையான் சென்ற 10 நவம்பர் 2015ம் ஆண்டு சந்தேகததின் பேரில் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net