Subscribe: RSS Twitter
:editor
6/4/2017

கடந்த ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக ஒருபோதும் இனவாத ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டதில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இபாஸ் நபுஹான் தலைமையில், அண்மையில் பாணந்துறையில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பஷில்,
“இன்று நாட்டில் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தின் அவசியம் உணரப்படுகின்ற போதும், இவ் அரசாங்கம் எதனையும் உருப்படியாகச் செய்யவில்லை. தற்போது சிறுபான்மை இனங்களின் ஆதரவில் ஆட்சிக்கு வந்துள்ள இந்த அரசாங்கம் இன்று அவர்களை புறந்தள்ளிவிட்டு ஆட்சி நடத்துகின்றது. அவர்களது தேவைகளை உணர்ந்து செயற்படவில்லை.
எமது ஆட்சிக் காலத்தில் வடக்கிலும், கிழக்கிலும் பலவாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டோம். வடக்கு அபிவிருத்திக்கு சில கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத நிலையிலும் நாம் அங்கு அபிவிருத்திகளைச் செய்தோம்.
எனினும் தற்போதைய ஆட்சிக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்குகின்றன. ஆனால் அவற்றினால் எவ்வித நன்மைகளும் சிறுபான்மையினங்களுக்கு கிடைக்கப்போவதில்லை” என பஷில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net