Subscribe: RSS Twitter
:editor
6/4/2017
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யுசவ்சாய், எதிர்வரும் 12ஆம் திகதி கனேடிய கௌரவ குடியுரிமையை பெறுகிறார்.
அத்தோடு அவர் கனடிய நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், கல்வி மூலம் பெண்களின் அதிகாரமளிப்பு மற்றும் அவர்களின் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெண்கள் எவ்வாறு நிலையான அபிவிருத்திக்கு தீவிரமான பங்களிப்பு செய்ய முடியும் என்பன குறித்து மலாலாவுடன் கலந்துரையாட பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ விரும்புவதாகவும் பிரதமர் அலுவலகம்; குறிப்பிட்டுள்ளது.
கௌரவ குடியுரிமையை பெறுவது குறித்து மலாலா யுசவ்சாய் கூறுகையில், “அகதிகள் நெருக்கடி குறித்த ஏற்புத்தன்மையில் கனடா மக்கள், உலக நாடுகளில் முன்னணியில் உள்ளனர். நாடாளுமன்றத்தின் அழைப்பினால் தான் கௌரமடைந்துள்ளளேன். வீரர்களின் பெருமையான நாட்டிற்கு வருவதற்கு தான் காத்திருக்கின்றேன்” என கூறினார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 22ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பரால் கனேடிய கௌரவ குடியுரிமை, மலாலா யுசவ்சாய்க்கு ரொறொன்ரோவில வழங்கப்படவிருந்தது. ஆனால் அன்றைய தினம் துப்பாக்கிதாரி ஒருவர் நாடளுமன்ற ஹில்லை தாக்கியதுடன், தேசிய போர் ஞாபகார்த்த மண்டபத்தில் போர் வீரர் ஒருவரையும் கொன்ற காரணத்தினால் இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net