Subscribe: RSS Twitter
:editor
6/4/2017

‘மைனே பியார் கியா’ என்ற படத்தில் மூலம் பொலிவூட்டில் அறிமுகமானவர் பாக்யஸ்ரீ. அவருடைய மகன் அபிமன்யூ தசானி, காஷ்யப் புரொடக்ஷன் கம்பெனி நிறுவனம் சார்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
ஆக்ஷன் கலந்த காமெடி பின்னணியில் உருவாக உள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் ராதிகா மதன் நடிக்க உள்ளார்.
வாசன் இயக்கவுள்ள இப்படத்தை அனுராக் காஷ்யப் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘ஹமர்த் கோ தர்த் நகின் ஹோட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொலிவூட்டிலும் விஜய் சேதுபதி களமிறங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
விஜய்சேதுபதியின் ‘கவண்’ படம் வெளியாகி திரையில் வெற்றி நடைப் போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக அவர் நடித்துள்ள ‘புரியாத புதிர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net