Subscribe: RSS Twitter
:editor1
6/4/2017

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் செயற்பாட்டில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஒருபோதும் குறைக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி பௌத்த மக்களின் மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
கண்டிக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சங்கைக்குரிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே மல்வத்துப்பீட மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் குறித்த கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
இதற்கமைய வடக்கு, கிழக்கு தீர்வு மற்றும் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளும்போது ஜனாதிபதி ஒருபோதும் தமது அதிகாரங்களைக் குறைக்க வேண்டாம் என்ற அழுத்தமான கோரிக்கையுடன், 21 யோசனைகளை அவர்கள் தமது கடிதத்தில் முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலிற்கான கால அவகாசம் மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், ஜனாதிபதிக்கு மேற்படி மகாநாயக்கர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net