Subscribe: RSS Twitter
:editor
6/4/2017
இலங்கைக்கு வரும்  பயணிகளுக்கு, எச்1 என்1 நோய்த் தொற்றுக் குறித்த பயண எச்சரிக்கையினை வெளிநாடுகள் விடுக்கத் தேவையில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்றையதினம் (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் எச்1 என்1 நோய்த் தொற்று காரணமாக கட்டார் அரசாங்கம் இலங்கைக்கு தமது நாட்டுப் பிரஜைகள் பயணம் செய்வது தொடர்பில் பயண எச்சரிக்கையினை அறிவித்திருந்தது. எனினும் இந்த பயண எச்சரிக்கையானது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
ஏனெனில் இந்த நோய்த் தொற்றுத் தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்து வருவது பதிவாகியுள்ளது. அத்துடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையானது அசாதாரண நிலைமை கிடையாது. நாட்டில் தற்போது டெங்குநோய் மற்றும் எச்1 என்1 போன்ற நோய்த் தாக்கங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இது குறித்து வெளிநாடுகளும், பயணிகளும் அச்சப்படத் தேவையில்லை” என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net