Subscribe: RSS Twitter
:editor1
6/4/2017

நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிரணியினர் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் நடைபெற்று வந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவிற்கு 30 நிமிடங்கள் உரையாற்றுவதற்காக ஒதுக்கப்பட்டது.
எனினும் குறித்த நேர அளவு போதுமானதல்ல என ஒன்றிணைந்த எதிரணியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டதோடு, நாடாளுன்ற செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவித்தனர். இதனையடுத்து சபை அமர்வுகளை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net