Subscribe: RSS Twitter
:editor
6/4/2017
‘ஜனயுகய’-சிங்கள மொழித் பத்திரிகையை, அர்ச்சுனா அலோசியஸியஸ் சென்ற 4ம் திகதி அச்சிட்டு வெளியிட்டார்.
ஜனயுகய- ‘மக்கள் யுகம்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்த அர்ச்சுனா அலோசியஸியஸ், பேர்ப்பச்சுவல் ரெசறீஸ் (Perpetual Treasuries) என்ற கம்பனியின் உரிமையாளரும்,மற்றும்  முன்னாள் மத்திய வங்கி கவர்னர் அர்ச்சுனா மகேந்திரனின் மருமகனுமாவார்.
அவர் தனது ஊடகங்களிற்காக இன்ரகரேட்டட் மீடியா நெற்வேர்க்  (Integrated Media Network) என்ற கம்பனியினை ஆரம்பித்துள்ளார்.
இந்த கம்பனியின் பிரதம நிர்வாக உத்தியோகத்தராக டெரிக் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்
 ஊடகத்திற்கான இயக்குனராக முன்னாள் மௌபீம சிங்கள தினசரியின் ஆசிரியர் திரு.துசேர குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் நவீன அச்சு இயந்திரங்களையும், தேவைப்படும் அச்சு இயந்திர உபகரணங்களையும், இறக்குமதிசெய்து, மல்வானை என்ற இடத்தில் அமைத்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்தப் பத்திரிகையின் ஞாயிறு வெளியீட்டுக்கு முன்பு மௌபீம பத்திரிகையின் ஞாயிறு இதழின் ஆசிரியரான உப்புள் ஜோசப் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்ற 4ம் திகதி வெளிவந்த ஜனயுகய சம்மந்தமாக இந்தப் பத்திரிகையில் கடமையாற்றும் திரு துசேரா குணரட்ண ‘தினச்செய்திக்கு’ தகவல் தந்த பொழுது, இன்ரகிரேட்டட் மீடியா நெற்வேர்க் ஒரு தனியான, சுதந்திரமான வர்த்தக அமைப்பு என்றும், நாட்டிலேயே இந்த அமைப்புத் தான்  இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி நிலையம்  மற்றும் அச்சிட்டு வெளியிடும்பத்திரிகைகளை கொண்டிருக்கும் வர்த்தக அமைப்பாகும் என கூறினார்.
மேலும் இவர் ‘தினச்செய்திக்கு’ தகவல் தருகையில், ஜனயுகய தினசரி ஒரு பிரதி ரூபா 20 ற்கு விற்பனையாகிறது என்றும், மொத்தமாக 28 பக்கங்கள் கொண்டது என்றும், ஐந்து மாகாணங்களுக்கான விசேட இதழ்கள் அச்சிட்டு வெளியிடப்படுகிறது என்றும் கூறினார். மேலும், ஞாயிற்றுக்கிழமை பத்திரிகை 92 பக்கங்களை கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார்.
அத்துடன்மே மாதம் நடுப்பகுதியில், ஆங்கிலம், மற்றும் தமிழ் மொழிகளுக்கான தினசரிகள் வெளிவரும் எனவும் கூறினார்.
அந்த பத்திரிகைகளின் பெயர்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
 தமது தமிழ் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் வைத்து அச்சிட்டு வெளியிடப்படும் எனவும் கூறினார்.
இதற்கிடையில் அர்ச்சுனா அலோசியஸினால் அச்சிட்டு  வெளியிடப்படும் ஜனயுகயவை கூட்டு எதிரணியினர்  பகீஸ்கரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
பிரச்சனைக்குரிய மத்திய வங்கி ஊழலோடு, சம்மந்தப்பட்டவர்கள் அச்சிட்டு வெளியிடும் எந்தப் பத்திரிகைகளுடனும், தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என டளஸ் அழகப்பெருமா  எம்.பி கூட்டு எதிரணி கட்சி சாட்சி சார்பில் தெரிவித்தார்.
-தினச்செய்தி-

Leave a Reply

You must be Logged in to post comment.

© 2017 Thinacheithi | தினச்செய்தி · Subscribe: RSS Twitter · WordPress Theme designed by Speed IT net